.label-size a:hover { text-decoration: none; }

Pages

page

Friday, 24 February 2012

சந்தோஷ்சிவனுக்கு விஜய் கால்ஷீட்!



'நண்பன்' படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'துப்பாக்கி'. காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, கலைப்புலி. எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. பெப்ஸி பிரச்னையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் இரண்டம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தோஷ் சிவனின் வேகமான மற்றும் துல்லியமான ஒளிப்பதிவை பார்த்த விஜய் 'துப்பாக்கி' படத்தினைத் தொடர்ந்து தனது கால்ஷீட் தேதிகளை சந்தோஷ் சிவன் இயக்கும் படத்திற்கு கொடுத்து இருக்கிறார்.

இப்படத்தினை யார் தயாரிக்க இருக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய்!



விஜய் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்த படம் 'போக்கிரி'. படத்தில் இறுதிகட்ட காட்சியில் தான் அவர் போலீஸ் அதிகாரி என தெரியவரும்.  முழுப்படத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்தது இல்லை.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'துப்பாக்கி' படம் முழுவதுமே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் விஜய். முதற்கட்டமாக மும்பையில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

'துப்பாக்கி' படத்தின் முக்கால்வாசி கதை மும்பையில் நடைபெறுவது போன்று அமைத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்திற்காக பெண் பார்க்கும் காட்சியை ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அக்காட்சியில் விஜய் போலீஸ் உடை அணிந்து காஜல் அகர்வாலை பார்க்க போவது போன்று காட்சி அமைத்து இருக்கிறார்கள்.

தற்போது நடைபெற்று வரும் பெப்ஸி பிரச்னையால் படப்பிடிப்பு தடைப்பட்டு இருக்கிறது. இந்நேரத்தில் 'துப்பாக்கி' படத்தில் தனது வேடத்திற்கு ஏற்றவாறு தனது உடம்பை மாற்றி வருகிறாராம்

Tuesday, 21 February 2012

சென்னை ரைனோஸ் அணிக்கு விஜய் கொடுத்த பார்ட்டி!


சினிமா நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த ஜனவரி 13-ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 12-ஆம் தேதி வரை நடைபெற்றது.சினிமா நட்சத்திரங்கள் தங்களது மொழி வாரியாக பிரிக்கப்பட்டு அவரவர் அணிக்காக விளையாடினர்.
இந்த தொடரில் விஷால் தலைமையில் களம் இறங்கிய தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணி சிறப்பாக விளையாடி கோப்பையை கைபற்றியது. சென்னையில் தெலுகு வாரியர்ஸ் அணியை எதிர்த்து சென்னை ரைனோஸ் விளையாடிய செமி பைனல் மேட்சை நடிகர் விஜய் கலந்து கொண்டு உற்சாகத்துடன் பார்த்து ரசித்தார்.
சென்னை அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் சென்னை ரைனோஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆட்டநாயகர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளார்.
இந்த பார்ட்டியில் சில நடிகைகளும் கலந்து கொண்டுள்ளார்கள்.

Wednesday, 15 February 2012

துப்பாக்கி படத்தில் விஜயுடன் ஜெய் ..!



கடல் மீனை பிடிச்சு வாய்காலில் விட்ட மாதிரி, திசை தப்பி திண்டாடிக் கொண்டிருக்கிறார் ஜெய். சுப்ரமணியபுரம் என்ற ஒரே ஒரு ஹிட்டுக்கு பின் தாறு மாறாக தாண்டவம் ஆடிய ஜெய்யை அப்படியே ஓரம் கட்டி ஆசுவாசப்பட்டுக் கொண்டது கோடம்பாக்கம். அவரும் நிலைமையை புரிந்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டதுடன், ஆகாயத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தார்.
ஏகப்பட்ட இடைவெளிக்கு பின் எங்கேயும் எப்போதும் வந்தது. மறுபடியும் ‘தாண்டவக்கோனே’ ஆகிவிட்டார் ஜெய். போன் வந்தால் எடுப்பதில்லை. நேரில் கண்டால் சிரிப்பதில்லை என்று ஒரே கம்ப்ளைண்ட் உதவி இயக்குனர்கள் மத்தியிலும், தயாரிப்பாளர்கள் மத்தியிலும். சம்பளத்தையும் ‘ஒன் சி’ கேட்கலாமே என்று ஏற்றிவிட்டார்களாம் உடனிருந்த நண்பர்கள். அதற்கேற்றார் போல ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார் ஜெய்.
இந்த நேரத்தில்தான் இன்னொரு சங்கடம் அவருக்கு. ஜெய்யை பொருத்தவரை மீட்பர், மேய்ப்பர் எல்லாமே முருகதாஸ்தான். ஏனென்றால் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் இவருக்கு வாய்ப்பு தந்ததே முருகதாஸ்தான். எனவே அவர் இயக்கி வரும் துப்பாக்கி படத்தில் ‘ஒரு கேரக்டர் இருக்கு. நடிக்கணும்’ என்றதும் கேள்வியே கேட்காமல் ஒப்புக் கொண்டார்.
விஜய் என்ற பெரிய ஹீரோ நடிக்கும் படத்தில் ஜெய் என்ற சிறிய ஹீரோவுக்கு என்ன வேலை இருக்கும்? பதற்றத்தை எப்போதும் முகத்தில் தேக்கி வைத்தபடியே வேலை பார்க்கிறாராம் ஜெய்.துப்பாக்கியை பொருத்தவரை ஜெய்க்கு கெஸ்ட் ரோல்தான்

விஜய்க்கு வில்லனா?


'நண்பன்' படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

'துப்பாக்கி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜெயராம்.

ஜெயராம் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் 'பொன்னர் சங்கர்'. மலையாள திரைப்படங்களில்  பிஸியாக இருக்கும் ஜெயராம் தமிழில் நல்ல வேடங்கள் வந்தால் மட்டுமே நடித்து வந்தார்.

'துப்பாக்கி' படத்தில் ஜெயராமிற்கு விஜய்க்கு இணையான வேடம் கொடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் சங்கம் - பெப்ஸி பிரச்னை முடிந்தவுடன் நடைபெற இருக்கும் 'துப்பாக்கி' படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் ஜெயராம்.

சரோஜா, தாம் தூம் படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெயராம். இப்படத்தில் அவர் வில்லனா இல்லையா என்பது சஸ்பென்ஸாம் !

Tuesday, 14 February 2012

விஜயின் பாட்டி மரணம்!



ஷோபா சந்திரசேகரனின் அம்மாவும் விஜய்யின் பாட்டியுமான லலிதா நீலகண்டன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.
லலிதா நீலகண்டனின் பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தி, பல படங்களைத் தயாரித்துள்ளனர். அவற்றை பெரும்பாலும் லலிதாவின் மருமகன் எஸ்ஏ சந்திரசேகரனே இயக்கினார்.
லலிதா நீலகண்டனுக்கு இரண்டு மகன்கள். பாடகரும் நடிகருமான எஸ் என் சுரேந்தர் மற்றும் சுந்தர். இரண்டு மகள்கள் ஷோபா சந்திரசேகரன் மற்றும் ஷீலா. ஷோபாவின் மகன் நடிகர் விஜய். ஷீலாவின் மகன் நடிகர் விக்ராந்த்.
பாட்டி மீது மிகுந்த பாசமாக இருந்தார் விஜய். மகள் ஷோபா- மருமகன் சந்திரசேரனுடன் வசித்து வந்த லலிதா நீலகண்டனுக்கு நேற்று நெஞ்சுவலி வந்தது. அவரை விஜயா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் இன்று காலை அவர் மரணமடைந்தார்.
அவருக்கு நுங்கம்பாக்கம் தெரஸா சர்ச்சில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. மாலையில் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. லலிதா நீலகண்டனுக்கு விஜய் ரசிகர்கள், திரையுலகினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Saturday, 4 February 2012

ரசிகர்கள் தான் எனது நண்பர்கள்-விஜய்



நண்பன் படம் வெற்றியின் மூலம் உற்சாகத்தில் இருக்கும் நடிகர் விஜய், எனது ரசிகர்கள் தான் எனது நண்பர்கள் என்று கூறியுள்ளார். இந்தியில் வெளிவந்த 3-இடியட்ஸ் படத்தை விஜய், ஸ்ரீகாந்த, ஜீவா ஆகியோரை வைத்து நண்பன் என்ற பெயரில் ரீ-மேக் செய்தார் ஷங்கர். சமீபத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் நண்பன் டீமே மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. இந்நிலையில் நண்பன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் கோவை வந்திருந்தார் நடிகர் விஜய். அப்போது ஆதரவற்ற முதியோர் இல்லத்தை சேர்ந்த சுமார் 100பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், அங்கு படிக்கும் மாணவர்கள் இருவருக்கு லேப்டாப்பும் வழங்கினார். பின்பு அங்குள்ள தியேட்டரில் ரசிகர்கள் முன்பு தோன்றி நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், நண்பன் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் ரசிகர்கள் தான். அவர்கள் தான் எனது நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி என்று கூறினார்

Thursday, 2 February 2012

ஸ்டிரைக் முடிந்ததும் 'துப்பாக்கி' ஷூட்டிங் ! : ஏ.ஆர்.முருகதாஸ்


'நண்பன்' படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடைபெற்று வந்தது. 'நண்பன்' படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் இருந்ததால் 'துப்பாக்கி' படப்பிடிப்பு சற்று தள்ளிவைக்கப்பட்டது. 

'நண்பன்' வெளியான சமயத்தில் பெப்சி - தயாரிப்பாளர் சங்கத்தின் பிரச்னையால், 'துப்பாக்கி' படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 'நண்பன்' படத்தில் விஜய்யின் நடிப்பை பார்த்துவிட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் இணையத்தில் " விஜய் 'நண்பன்' படத்தில் அருமையாக நடித்து இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் ஸ்டிரைக் முடிந்தவுடன் அவருடன் பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது " என்று கூறியுள்ளார்.

விஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி !

அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா - 2', விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'துப்பாக்கி' இவ்விரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் வித்யூத் ஜாம்வால்.

ஒரே சமயத்தில் தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் நாயகர்களுடன் நடித்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார் வித்யூத். இது குறித்து வித்யூத் கூறியிருப்பது :

" ஒரே சமயத்தில் விஜய் மற்றும் அஜீத் இருவருடனும் நடித்து வருவது சந்தோஷமாக இருக்கிறது.   

'பில்லா 2' படத்திற்காக ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கினோம்.  ஆங்கில சினிமாவில் தான் அதுமாதிரியான சண்டைக் காட்சிகளைப் பார்க்க முடியும்.  இந்திய சினிமாவில் முதன் முறையாக அதுபோல் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கி இருக்கிறோம்.  இந்த சண்டைக்காட்சியில் நான் நடித்ததில் பெருமைப்படுகிறேன். 

அஜீத் மிகவும் எளிமையான மனிதர். பல விஷயங்கள் குறித்தும் தெளிவான பார்வை உடையவர். விஜய்யுடன் நடிக்கும்போது  மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு ரசிகர்கள் இருந்தும் இன்னும் தன் தொழிலில் மிகச் சிரத்தையுடன் இருக்கிறார். "