.label-size a:hover { text-decoration: none; }

Pages

page

Thursday, 29 March 2012

துப்பாக்கியின் முதல் தோட்டா!


விஜய் ரசிகர்கள் இப்போது ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருப்பது 'துப்பாக்கி' படத்தின் FIRST LOOK எப்போது என்பது தான்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.

விஜய், காஜல் அகர்வால் நடனமாடிய ஒரு பாடலை பாங்காக்கில் படமாக்கி இருக்கிறார்கள். இதுவரை 'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு சுமார் 50% முடிந்துள்ளது.

சத்யன் காமெடியனாகவும், ஜெயராம் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்திலும், வித்யூத் ஜாம்வால் வில்லனாகவும் நடித்து வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து தமிழ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் சந்தோஷ் சிவன்.

பாதி படப்பிடிப்பு முடிந்து விட்ட காரணத்தால் படத்தின் FIRST LOOK எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஏப்ரல் 13ம் தேதி படத்தின் FIRST LOOK வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

'துப்பாக்கி' திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரசிகர்களின் இதயத்தைக் குறிவைத்து வருகிறது

Wednesday, 21 March 2012

ஆக்ஷன் நாயகன் விஜய்

ஆக்ஷன், அதிரடி கலந்த மசாலா படங்களை தனது ரசிகர்களுக்கு விருந்தாக படைத்து வந்தார் விஜய்.

நடுவில் 'காவலன்', 'நண்பன்' உள்ளிட்ட படங்களின் வரவேற்பை தொடர்ந்து  நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடிப்பேன் என்று நிரூபித்தார்.

'காவலன்', 'நண்பன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் படங்களை பார்த்தால், நல்ல கதையம்சம் உள்ள படங்களை விட தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதே முக்கியம் என்ற முடிவை எடுத்து இருக்கிறார் என்றே தெரிகிறது.

விஜய்யின் ஆக்ஷன், ஏ.ஆர்.முருகதாஸின் விறுவிறுப்பான திரைக்கதை ஆகிய இரண்டையும் கலந்து விஜய் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது 'துப்பாக்கி'.

அதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ' யோஹன் ' படத்தில் விஜய்யை ஸ்டைலிஷான ஆக்ஷன் கதையின் நாயகனாக ஆக்கி இருக்கிறார் கெளதம்.

இயக்குனர் விஜய்யுடன் விஜய் சேரும் படமும் ஆக்ஷன் கதை தான்.

Monday, 19 March 2012

ஹிந்தியில் பிரமாண்டமாக உருவாகும் துப்பாக்கி


ஏ.ஆர். முருகதாஸ் ‘7-ஆம் அறிவு’ படத்தையடுத்து அவர் இயக்கும் படம் ‘துப்பாக்கி’. இப்படத்தில் விஜய், காஜர் அகர்வால் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக வருகிறார். என்கவுண்டர் போலீஸ்காரரின் கதையே இப்படத்தின் கரு. தமிழில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படத்தை இந்தியிலும் இயக்க திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருதாஸ்.
இந்தியில் விஜய் நடிக்கும் கேரக்டரில் அக்ஷய்குமார் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Wednesday, 14 March 2012

துப்பாக்கியுடன் மும்பையில் திரிந்த விஜய்

விஜய் நடிக்க, முருகதாஸ் இயக்கும் ‘துப்பாக்கி’யின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது. காட்சிப்படி கும்பல் நிறைந்த தெருவில் விஜய் செல்வது போல எடுக்க வேண்டியிருந்ததாம். படத்தின் முக்கியமான காட்சி அது என்பதால், பொதுமக்களுக்குத் தெரியாமல் அக்காட்சியை கும்பல் இருக்கும் சாலையில் படம்பிடிக்க திட்டமிட்டிருந்தார்கள்.
பொதுமக்கள் விஜய் படப்பிடிப்பு நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் முன், அவசரமாக எடுக்க வேண்டிய காட்சி என்பதால், படக்குழுவினர் தயாராக, விஜய் சட்டென்று தானே கேமராவைக் கையாண்டு அக்காட்சியை படம் பிடித்துள்ளார்.
விஜய் எடுத்த படப்பதிவைப் பார்த்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், அந்த காட்சியை விஜய் மிக அழகாக எடுத்துள்ளதாக பாராட்டியிருக்கிறார்.

Saturday, 3 March 2012

தயாரிப்பாளர் ஆகிறார் விஜய்


துப்பாக்கி பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் இளைய தளபதி விஜய் தன்து தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தை ரீமேக் தயாரிப்பு பொறுப்பை ஏற்றிருக்கிறார் விஜய். இந்த படத்தில் தானே நடிக்காமல் வேறு ஒரு ஹீரோவை வைத்து படம் பண்ண வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருந்தாராம். இதனையடுத்து நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவை ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளாராம் விஜய். விக்ரம் பிரபுக்கு ஜோடியாக கார்த்திகா நடிக்கிறாராம். படத்தை புது இயக்குனர் ரமேஷ் இயக்குகிறார்

'துப்பாக்கி'க்கு ஸ்ரீகர் பிரசாத்!



விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜம்வால், சத்யன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்காக தற்போது ஆக்ஷன் காட்சிகளை மும்பையில் படமாக்கி வருகிறார்கள். இச்சண்டை காட்சிக்காக புதுவிதமாக நிறைய விஷயங்களை கையாண்டு வருகிறாராம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

கெளதம் மேனன், இயக்குனர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மூவரின் படங்கள் என்றாலே படத்தின் எடிட்டர் ஆண்டனியாக தான் இருக்கும். ஆனால் '7ம் அறிவு' படத்தின் எடிட்டிங்கின் போது ஏ.ஆர்.முருகதாஸுக்கும் ஆண்டனிக்கும் இடையே சிறு பிரச்னையாம்.

ஆகையால் 'துப்பாக்கி' படத்தின் எடிட்டராக பணியாற்ற ஸ்ரீகர் பிரசாத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் முருகதாஸ்.  மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து', 'ராவணன்' உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் ஸ்ரீகர் பிரசாத்.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக தேசிய விருதினை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.