.label-size a:hover { text-decoration: none; }

Pages

page

Wednesday, 30 November 2011

துப்பாக்கியில் காக்கிச் சட்டை அணியும் விஜய்!

டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடக்க விழா இல்லாமல் பத்திரிகை விளம்பரத்தோடு ‘துப்பாக்கி படப்பிடிப்பை தொடங்க இருக்கிறது
ஏ.ஆர்.முருகதாஸ்- இளையதளபதி விஜய் கூட்டணி. முதல்முறையாக இந்தக் கூட்டணி ஒன்றினைவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியிருகிறது.
ஆனால் இன்னும் துப்பாக்கி படம் பற்றிய தகவல்கள் சூடு பிடிக்க வில்லை. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரீஸ் ஜயராஜ் இசையமைக்க இருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் இந்தப் படத்தில் விஜய் ஏற்க இருக்கும் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் முருகதாஸ் வட்டாரத்தில் இருந்து அனல் பறக்கும் தகவல் கசிகிறது. துப்பாக்கி படத்தில் விஜய் இளம் போலீஸ் கமிஷனராக நடிக்க இருக்கிறார் என்ற தகவல்தான் அது.
ஏற்கனவே போக்கிரி படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தார் விஜய். ஆனால் அதில் முழுமையான போலீஸ் அதிகாரி கேரக்டர் அமைய வில்லை. ஆனால் துப்பாக்கி ஒரு துணிச்சலான போலீஸ் அதிகாரியின் கதை என்கிறார்கள். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து முப்பைக்கு தூக்கி அடிக்கப் படும் ஒரு தமிழ் திகாரியின் கதை என்கிறார்கள். முருகதாஸுடன் சந்தோஷ் சிவன் மட்டுமல்ல, முதல் முறையாக எழுத்தாளர் ஜெயமோகனும் இணைய இருகிறார். இந்தபடத்துக்கு ஜெயமோகனே வசனம் எழுதுகிறார்.
இதற்கிடையில் தமிழ்தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரேநேரத்தில் எடுக்க திட்டமிட்ட முருகதாஸுக்கு ஒரு சிறு பின்னடைவாம். தெலுங்கிலும் ‘ துப்பாக்கி என்ற தலைப்பிலேயே படத்தை வெளியிட விரும்பி, தெலுங்கு பிலிம் சேம்பரில் இந்த தலைப்பை பதிவு செய்யச் சென்றாராம்.
ஆனால் அங்கே பிரபல தயாரிப்பாளர் ’ஜிங்கா ஹரீஷ் பாபு’ என்பவர் இந்தத் டைட்டிலை ஏற்கனவே பதிவு செய்து, படத்தை தொடங்கும் நிலையில் இருகிறாராம். அது நக்‌ஷலைட்டுகள் பற்றிய கதை என்பதால் துப்பாக்கி தலைப்பை தரமுடியாது என்று மறுத்து விட்டராம் ஹரீஷ் பாபு. இதனால் தற்போது தமிழில் மட்டும் படத்தை எடுத்து விட்டு, பிறகு தெலுங்கில் டப் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருகிறார்களாம்.

Sunday, 20 November 2011

VENKAT PRABHU'S NEXT HERO IS VIJAY



Looks like Venkat Prabhu has found the hero for his next. It is none other than Vijay. After directing Ajith in Mankatha, which got a huge opening, Venkat’s status as a director went up. There were a lot of rumors about his next project and we hear that it will be with the Ilayathalapathy. Vijay has given the go ahead for this project, sources say.


And this film will be produced by Venkat’s long-time buddy SPB Charan, son of popular singer SP Balasubramaniam. The groundwork for this project is on and Venkat is working round the clock to begin it as early as possible.

Vijay - AR Murugadoss film Officially Titled 'THUPPAKI'

Vijay,A.R.Murugadass,Kajal Agarwal and Hariss Jayaraj joined in a "THUPPAKI" film. This is a gangster film.Santosh sivan is the Camerman of Thuppaki.Expected more leading technicians work in the film.

Thuppaki film shooting places mostly in Thiruchendur and Mumbai.Shooting starts on November 23rd.Film produced by Vijay's father S.A.Chandrasekaran.

We hope A.R.Murugadass will give a different film for Ilaya Thalapathy.Sources said Vijay's choice is A.R.Rahman for score music in Thuppaki film.

Thursday, 17 November 2011

விஜய்க்கு ஜோடியாகும் காஜல்!



விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்திற்கு ஏஞ்சலா ஜான்சனை நாயகி ஆக்கலாம் என்று முடிவு செய்து இருந்தார்கள்.

விஜய் - ஏஞ்சலா ஜான்சனை வைத்து ஒரு போட்டோ ஷுட் நடத்தினார் சந்தோஷ் சிவன். இந்நிலையில் இப்படத்தில் இருந்து தேதிகள் பிரச்னை காரணமாக விலகி விட்டாராம் ஏஞ்சலா ஜான்சன்.

இதனால் வேறு ஒரு நாயகியை தேடி வந்தார்கள். இந்தியில் முன்னனி நாயகியாக இருக்கும் சோனம் கபூரை நாயகி ஆக்கலாம் என்று முடிவு செய்து  அவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வலம் வந்தன.

இந்நிலையில் விஜய் படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். டிசம்பர் 1ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

தற்போது தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வருகிறவர் காஜல். தமிழில் சூர்யாவிற்கு ஜோடியாக மாற்றான், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருடன் ஒரு படம் மற்றும் ராம் சரண் தேஜா உடன் ஒரு படம் என நடித்து வருபவர் விஜய் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

'மாலை நேர மழைத்துளி' என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தினை இயக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார்.

Thursday, 10 November 2011

'ஸ்டார் டாக்'கில் விஜய்யின் 'பிக்' டாக்

'வேலாயுதம்' கொடுத்த வெற்றியால் விஜய், ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதில் ஒன்றாக பிக் எப்.எம் மற்றும் பிபிஸி இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'பிக் பிபிஸி ஸ்டார் டாக்' என்ற நிகழ்ச்சி. இதில் விஜய்யின் 52ஆவது படமான 'வேலாயுதம்' வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருடைய ரசிகர்களும், கல்லூரி மாணவர்களுமான 52 பேர் உடலுறுப்பு தானம் செய்தனர். அவர்கள் உடல் உறுப்பு தானம் செய்ததற்கான அடையாள அட்டையை விஜய் அவர்களுக்கு வழங்கினார். மோகன் பவுண்டேஷன் அமைப்பு இதற்கான ஏற்பாட்டை செய்தது. மேலும் லிட்டில் ஆர்.ஜே என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான ஆர்.ஜே தேர்வு போட்டி நிகழ்ச்சியையும் விஜய் ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 52 மாணவர்களும் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் ஒருவர், "உங்களிடம் உள்ள குணங்களில் எது உங்களுக்கு அதிகம் பிடிக்கும்? என்று கேட்க, அதற்கு பதிலளித்த விஜய், "என்னிடம் மற்றவர்களுக்கு பிடிக்காத ஒன்று எனக்கு அதிகம் பிடிக்கும். அதுதான் அமைதி." என்று கூறினார்.

Saturday, 5 November 2011

ஏழாம் அறிவை மிஞ்சும் வேலாயுதம் !


விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். தீபாவளி தினத்தன்று வெளியான இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

முதல் வாரத்தை விட இரண்டாம் வாரத்தில் அதிக தியேட்டர்களில் வெளியாகி இருப்பதால்,  அந்த சந்தோஷத்தை கொண்டாட படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்து அளித்தார் விஜய்.

'வேலாயுதம்' குறித்து ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

'வேலாயுதம்' படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கி வெளியிட்டது ஐங்கரன் நிறுவனம்.

இங்கிலாந்தில் 'வேலாயுதம்'   17 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு (அக்டோபர் 26-30 வரை)  1.03 கோடி வசூலித்து உள்ளது.  அதே நேரம்  'ஏழாம் அறிவு' திரைப்படம்  19 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு (அக்டோபர் 26-30 வரை) 85.77 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.

'வேலாயுதம்' படத்தின் இந்த வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் விஜய், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'நண்பன்' படத்தினையும் மிகவும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்.

'வேலாயுதம்' படத்தின் இந்த வெற்றியால்  மீண்டும் விஜய் - ஜெயம் ராஜா கூட்டணி சேர்த்தாலும சேரும் என்கிறார்கள் தமிழ் திரையுலகில்.

Tuesday, 1 November 2011

ILAYATHALAPATHY VIJAY WITH A.R.MURUGADOSS

Ilayathalapathy Vijay\'s VELAYUDHAM has struck gold in the box office with global reach and positive reviews from all sections of media.

A great news for Ilayathalapathy Vijay fans,Ilayathalapathy Vijay gonna join hands with A.R.Murugadoss for his 54th movie titled Maalai Nerathu Mazhaithuli produced by S.A.Chandrasekhar.Itz an action packed story with love.Movie to be shot fully in the skirts of mumbai.Shootin begins on november 23rd and hope to end by february of 2012.

Crew of Vijay - ARM combo. Music by Harris Jayaraj, Camera by Santhosh Shivan & Jayamohan is the dialogue writer. Jayamohan was the dialogue writer for Naan Kadavul & Angadi Theru.

வேலாயுதமும் 40 கோடியும் !




விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவந்த படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வெளியிட்டார்.

'ஏழாம் அறிவு' படத்துடன் 'வேலாயுதம்' படம் போட்டியிட்டது. ஏழாம் அறிவு படம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், 'வேலாயுதம்' 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டது.

'ஏழாம் அறிவு'  நேற்று வரை ( அக்டோபர் 31 ) 40.25 கோடியும், 'வேலாயுதம்'  40 கோடியும் வசூல் செய்துள்ளன. குறைந்த தியேட்டர்களில் வெளியிட்டாலும் 40 கோடி வசூல் செய்ததால் விஜய் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

விஜய் இதற்காக தனது வீட்டில் ஜெயம் ராஜா, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினருக்கு விருந்து அளித்தார். சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் இரண்டு அரங்கத்திலும் 'ஏழாம் அறிவு' படத்தினை திரையிட்டு இருந்தார்கள். இன்று முதல் அதில் ஒரு அரங்கில் 'ஏழாம் அறிவு'க்கு பதிலாக  'வேலாயுதம்' திரையிட்டு இருக்கிறார்கள்.

இரண்டாம் வாரத்தில் நிறைய தியேட்டர்களில்  'வேலாயுதம்' படத்தினை திரையிட முன்வந்ததை அடுத்து கடும் சந்தோஷத்தில் இருக்கிறாராம் விஜய்.