.label-size a:hover { text-decoration: none; }

Pages

page

Thursday, 10 November 2011

'ஸ்டார் டாக்'கில் விஜய்யின் 'பிக்' டாக்

'வேலாயுதம்' கொடுத்த வெற்றியால் விஜய், ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதில் ஒன்றாக பிக் எப்.எம் மற்றும் பிபிஸி இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'பிக் பிபிஸி ஸ்டார் டாக்' என்ற நிகழ்ச்சி. இதில் விஜய்யின் 52ஆவது படமான 'வேலாயுதம்' வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருடைய ரசிகர்களும், கல்லூரி மாணவர்களுமான 52 பேர் உடலுறுப்பு தானம் செய்தனர். அவர்கள் உடல் உறுப்பு தானம் செய்ததற்கான அடையாள அட்டையை விஜய் அவர்களுக்கு வழங்கினார். மோகன் பவுண்டேஷன் அமைப்பு இதற்கான ஏற்பாட்டை செய்தது. மேலும் லிட்டில் ஆர்.ஜே என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான ஆர்.ஜே தேர்வு போட்டி நிகழ்ச்சியையும் விஜய் ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 52 மாணவர்களும் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் ஒருவர், "உங்களிடம் உள்ள குணங்களில் எது உங்களுக்கு அதிகம் பிடிக்கும்? என்று கேட்க, அதற்கு பதிலளித்த விஜய், "என்னிடம் மற்றவர்களுக்கு பிடிக்காத ஒன்று எனக்கு அதிகம் பிடிக்கும். அதுதான் அமைதி." என்று கூறினார்.

No comments:

Post a Comment