.label-size a:hover { text-decoration: none; }

Pages

page

Sunday, 15 July 2012

யோஹனில் ஹாலிவுட் நடிகை


விஜய் நடிக்க உள்ள யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் ஹாலிவுட் நடிகையை நடிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொலிவுட்டில் இளையதளபதி விஜய்- கௌதம் மேனன் கூட்டணி, விரைவில் யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தின் மூலம் இணைய உள்ளது.
இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப் படத்தில் இளைய தளபதி சர்வதேச உளவாளியாக நடிக்க உள்ளார்.
அதன் முதற்படியாக படத்துக்கு யோஹன் என பெயரிடப்பட்டுள்ளது. இது உலகளவில் நன்கு பிரபலம் அடைந்த பெயர் ஆகும்.
தற்போது யோஹன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகையை நடிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதற்குண்டான பணிகளில் கவுதம் மேனன் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது கொலிவுட்டை பொறுத்தவரை ஹாலிவுட் நடிகைகள் உலாவ ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே எமி ஜாக்சன், ப்ரூனா அப்துல்லா ஆகியோர் வெளிநாட்டு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, 30 May 2012

கமல் திறமை விஜயிடம் உள்ளது:முருகதாஸ்!!


விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புல்லட் போட்டு வரும் ‘துப்பாக்கி’ பளபளப்பாக தயாராகி வருகிறது.
‘துப்பாக்கி’ படம் குறித்தும், எந்த அளவிற்கு பணிகள் முடிந்து இருக்கின்றன என்பது குறித்தும் ஏ.ஆர்.முருகதாஸ் அளித்து இருக்கும் பேட்டியில் இருந்து,
” துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட 60% முடிவடைந்து விட்டது. மும்பை வாழும் ஒரு தமிழ் குடும்பத்தினை பற்றிய கதை. அதனால் முழுக்க முழுக்க மும்பையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விஜய்யிடம் நான் இவ்வளவு TIMING, SENSE OF HUMOUR எதிர்பார்க்கவில்லை. படத்தில் ஒரு பக்க வசனம் ஆகட்டும், நீளமான காட்சிகள் ஆகட்டும் எல்லாவற்றையும் ஒரே டேக்கில் செய்து முடித்து விடுகிறார்.
உண்மையிலேயே இதனை நான் ஒரு கமர்ஷியல், மாஸ் ஹீரோ விஜய்யிடம் நான் எதிர்பார்க்கவில்லை. இதனை நான் அவரிடமே கூறி இருக்கிறேன்.
கமல் சாருக்கு பிறகு விஜய் சார் தான் தொடர்ந்து பாடல்களை பாடி வந்தார். ஏனோ அவரும் 6 வருடங்களாக பாடல் எதுவும் பாடுவது இல்லை.
விஜய்யை பாட வைத்து அதனை நமது படத்திற்கு உபயோகிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஹாரிஸ் சாரும் அந்த பாடலை கம்போஸ் செய்து முடித்தவுடன் விஜய்யை இந்த பாடலை பாட வைக்கலாமா என்று கேட்டார்.
நானும் நம்ம நினைத்தோம், இவர் கேட்கிறாரே என்று உடனே சரி என்று கூறி விட்டேன். அப்பாடல் கண்டிப்பாக ‘துப்பாக்கி’ ஆல்பத்தில் ஒரு சிறந்த பாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
‘துப்பாக்கி’ படத்தின் கதையினை முதலில் இந்தியில் அக்ஷய்குமார் நடிப்பதாக தான் இருந்தது. ஆனால் விஜய் சாரின் கால்ஷீட் தயாராக இருக்கிறது என்றவுடன் அக்கதையினை விஜய் சார் வைத்து தமிழில் உடனே துவங்கி விட்டேன்.
இப்படத்தினை முடிந்தவுடன் இதே கதையினை அக்ஷய்குமாரை வைத்து இந்தியில் பண்ண இருக்கிறேன்.
‘கஜினி’ படத்தினை அடுத்து இந்தியில் ரீமேக் செய்யக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ” என்று தெரிவித்து இருக்கிறார்.

Monday, 30 April 2012

விஜய் போட்ட ஆட்டம்!! மிரண்டது பாலிவுட்


இந்தியில் பிரபுதேவா இயக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம் ரவுடி ரத்தோர். இதில் அக்ஷய் குமார் இரட்டை வேடங்களிலும் அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கிறார்கள். சஞ்சய் லீலா பன்சாரி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகி வருகிறது இந்த ரவுடி ரத்தோர்.
இதில் ஸ்பெஷல் என்னவென்றால் இது தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சிறுத்தை படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இத் திரைப்படத்தில் பிரபுதேவா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இளையதளபதி விஜய் ஓரு பாடலுக்கு நடனம் ஆடிக்கொடுத்துள்ளாராம். அதுவும் படத்தின் நட்சத்திரங்கள் எல்லோரும் அக்ஷய் குமார் உட்பட அவரது நடனத்தைப் பார்த்து அசந்து போகும் அளவுக்கு மிகவும் ஸ்டைலிஷாகவும் சூப்பராகவும் நடனமாடியுள்ளாராம். சூப்பர்ப் என்று அத்தனை பேரும் பாராட்டித் தள்ளி விட்டனராம். சும்மா சொல்லக் கூடாது, டான்ஸும் செம கலக்கலாக, படு ஸ்டைலிஷாக வந்துள்ளதாம்.
படம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிரடி ஆக்ஷன் ரோலுக்கு திரும்பியுள்ளார் அக்ஷ்ய் குமார்.

Saturday, 14 April 2012

யோஹன்


யோஹன் ' ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு. முருகதாஸ் கூட விஜய் ‘துப்பாக்கி’ முடிச்சிட்டா, ‘யோஹன்’ ஆரம்பிச்சிடலாம். இந்தப் படத்துல விஜய் மட்டும்தான் தமிழ் முகம்.

ஹீரோயின் ஒரு இந்தியனா இருப்பாங்க. மத்த நடிகர், நடிகை எல்லாருமே வெளிநாட்டினர்தான். தமிழ் படம்தான் ஆனா, இங்கிலீஷ் சப்-டைட்டிலோட உலகம் முழுக்க எங்கேயும் வெளியிடும் தரம் இருக்கும்.

‘யோஹன்’ங்கிற இந்த கேரக்டரை எஸ்டாபிளிஷ் பண்ணிட்டா ஜேம்ஸ் பாண்ட் படம்மாதிரி அத்யாயம் 1, 2னு அடுத்தடுத்து பண்ணலாம். " என்று தெரிவித்து இருக்கிறார்..

Tuesday, 10 April 2012

சரவணன் இயக்கத்தில் நடிக்க இருகிறார் விஜய்

ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த படம் என்ன என்பதை முடிவு செய்து விடுவார் இளைய தளபதி விஜய்.
துப்பாக்கியில் தீ மாதிரி நடித்துக் கொண்டிருக்கும் விஜய், தற்போதைய நிலவரப்படி அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்க இருகிறார் என்கிறார்கள். தற்போது தாண்டவம் பட்த்தை இயக்கி முடிக்கும் தருவாயில் இருக்கும் இயக்குனர் விஜய், இளையதளபதியின் படத்துக்கான டயலாக் எழுதும் பணியை பிரபல எழுத்தாளர் ஒருவரிடம் ஒப்படைத்து இருகிறாராம்.

ஆனால் துப்பாக்கி முடிந்ததும் அடுத்து விஜய்’ எங்கேயும் எப்போதும்’ பட இயக்குனர் சரவணன் இயக்கத்தில் நடிக்க இருகிறார் என்கிறார்கள் விஜய் வட்டாரத்தில் இருந்து. எங்கேயும் எப்போதும் படத்தை தொடர்ந்து ஆர்யாவை நாயகனாக்க் கொண்டு லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு பட்த்தை இயக்க இருந்தார் சரவணன்
ஆனால் கடைசி நேரத்தில் எனக்கு கதை பிடிக்க வில்லை என்று விலகினாராம் ஆர்யா. தற்போது மும்மையில் துப்பாக்கி சூட்டிங்கில் இருந்தபோது, துப்பாக்கி ஸ்கிரிப்டில் ஏற்பட்ட சில லாஜிக்கல் சந்தேகங்களை டிஸ்கஸ் செய்ய தனது உதவியாளர் சரவணனை அழைத்திருகிறார் இயக்குனர் முருகதாஸ். அந்த சமயத்தில்தான், சரவணனை முருகதாஸுக்கு அறிமுகப்படுத்தி வைத்து, சரவணனிடம் இருக்கும் கதைக் கேளுங்கள் என்றாராம்.

அன்று மாலையே படப்பிடிப்பு முடிந்து அறைக்கு திரும்பியதும், விஜய்க்கு கதை சொல்லியிருகிறார் சரவணன். ஆர்யா வேண்டாம் என்று மறுத்த அதே கதை இளைய தளபதியை உறைய வைத்து விட்டது என்கிறார்கள் சரவணன் தரப்பில்.
இந்தக் கதையில் நான் நடிப்பது உறுதி என்று வாக்குறுதி கொடுத்திருகிறாராம் விஜய். சரவணன் – விஜய் கூட்டணி எப்போது படப்பிடிப்புக்கு கிளம்புவார்கள் என்பது விஜய்க்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

Tuesday, 3 April 2012

'துப்பாக்கி'ல நடிக்கிறேன் ! : ஏ.ஆர். முருகதாஸ்


விஜய் ரசிகர்கள் தற்போது இணையங்களில் அதிகமாக விவாதித்து வருவது 'துப்பாக்கி' படத்தின் FIRST LOOK எப்படி இருக்கும் என்பது பற்றி தான்.

விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் 'துப்பாக்கி' படத்தின் FIRST LOOKல் விஜய் இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறார்.

'துப்பாக்கி' படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் இணையத்தில் " படத்தில் ஐந்து பாடல்கள் மற்றும் ஒரு சிறு பாடல் இருக்கிறது. துப்பாக்கி படத்திற்கான THEME MUSIC வரும் வாரத்தில் தயார் செய்ய இருக்கிறோம்.

படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 12ம் தேதி முதம் துவங்க இருக்கிறது.

படத்தின் விஜய்யின் வேண்டுகோளுக்கு இணங்க நானும் ஒரு சிறு வேடத்தில் நடித்து இருக்கிறேன். 'துப்பாக்கி' படத்திற்கான FIRST LOOKல் பணியாற்ற உள்ளோம்.

படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் வந்து விட்டால் அவரது தனது போனை தொடக் கூட மாட்டார். வேலையில் அவர் அவ்வளவு ஈடுபாட்டுடன் இருக்கிறார். அது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது " என்று தெரிவித்து இருக்கிறார்.

'துப்பாக்கி'யில் காஜல் அகர்வாலின் பெயர் 'நிஷா' வாம்.

Thursday, 29 March 2012

துப்பாக்கியின் முதல் தோட்டா!


விஜய் ரசிகர்கள் இப்போது ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருப்பது 'துப்பாக்கி' படத்தின் FIRST LOOK எப்போது என்பது தான்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.

விஜய், காஜல் அகர்வால் நடனமாடிய ஒரு பாடலை பாங்காக்கில் படமாக்கி இருக்கிறார்கள். இதுவரை 'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு சுமார் 50% முடிந்துள்ளது.

சத்யன் காமெடியனாகவும், ஜெயராம் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்திலும், வித்யூத் ஜாம்வால் வில்லனாகவும் நடித்து வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து தமிழ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் சந்தோஷ் சிவன்.

பாதி படப்பிடிப்பு முடிந்து விட்ட காரணத்தால் படத்தின் FIRST LOOK எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஏப்ரல் 13ம் தேதி படத்தின் FIRST LOOK வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

'துப்பாக்கி' திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரசிகர்களின் இதயத்தைக் குறிவைத்து வருகிறது

Wednesday, 21 March 2012

ஆக்ஷன் நாயகன் விஜய்

ஆக்ஷன், அதிரடி கலந்த மசாலா படங்களை தனது ரசிகர்களுக்கு விருந்தாக படைத்து வந்தார் விஜய்.

நடுவில் 'காவலன்', 'நண்பன்' உள்ளிட்ட படங்களின் வரவேற்பை தொடர்ந்து  நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடிப்பேன் என்று நிரூபித்தார்.

'காவலன்', 'நண்பன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் படங்களை பார்த்தால், நல்ல கதையம்சம் உள்ள படங்களை விட தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதே முக்கியம் என்ற முடிவை எடுத்து இருக்கிறார் என்றே தெரிகிறது.

விஜய்யின் ஆக்ஷன், ஏ.ஆர்.முருகதாஸின் விறுவிறுப்பான திரைக்கதை ஆகிய இரண்டையும் கலந்து விஜய் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது 'துப்பாக்கி'.

அதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ' யோஹன் ' படத்தில் விஜய்யை ஸ்டைலிஷான ஆக்ஷன் கதையின் நாயகனாக ஆக்கி இருக்கிறார் கெளதம்.

இயக்குனர் விஜய்யுடன் விஜய் சேரும் படமும் ஆக்ஷன் கதை தான்.

Monday, 19 March 2012

ஹிந்தியில் பிரமாண்டமாக உருவாகும் துப்பாக்கி


ஏ.ஆர். முருகதாஸ் ‘7-ஆம் அறிவு’ படத்தையடுத்து அவர் இயக்கும் படம் ‘துப்பாக்கி’. இப்படத்தில் விஜய், காஜர் அகர்வால் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக வருகிறார். என்கவுண்டர் போலீஸ்காரரின் கதையே இப்படத்தின் கரு. தமிழில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படத்தை இந்தியிலும் இயக்க திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருதாஸ்.
இந்தியில் விஜய் நடிக்கும் கேரக்டரில் அக்ஷய்குமார் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Wednesday, 14 March 2012

துப்பாக்கியுடன் மும்பையில் திரிந்த விஜய்

விஜய் நடிக்க, முருகதாஸ் இயக்கும் ‘துப்பாக்கி’யின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது. காட்சிப்படி கும்பல் நிறைந்த தெருவில் விஜய் செல்வது போல எடுக்க வேண்டியிருந்ததாம். படத்தின் முக்கியமான காட்சி அது என்பதால், பொதுமக்களுக்குத் தெரியாமல் அக்காட்சியை கும்பல் இருக்கும் சாலையில் படம்பிடிக்க திட்டமிட்டிருந்தார்கள்.
பொதுமக்கள் விஜய் படப்பிடிப்பு நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் முன், அவசரமாக எடுக்க வேண்டிய காட்சி என்பதால், படக்குழுவினர் தயாராக, விஜய் சட்டென்று தானே கேமராவைக் கையாண்டு அக்காட்சியை படம் பிடித்துள்ளார்.
விஜய் எடுத்த படப்பதிவைப் பார்த்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், அந்த காட்சியை விஜய் மிக அழகாக எடுத்துள்ளதாக பாராட்டியிருக்கிறார்.

Saturday, 3 March 2012

தயாரிப்பாளர் ஆகிறார் விஜய்


துப்பாக்கி பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் இளைய தளபதி விஜய் தன்து தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தை ரீமேக் தயாரிப்பு பொறுப்பை ஏற்றிருக்கிறார் விஜய். இந்த படத்தில் தானே நடிக்காமல் வேறு ஒரு ஹீரோவை வைத்து படம் பண்ண வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருந்தாராம். இதனையடுத்து நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவை ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளாராம் விஜய். விக்ரம் பிரபுக்கு ஜோடியாக கார்த்திகா நடிக்கிறாராம். படத்தை புது இயக்குனர் ரமேஷ் இயக்குகிறார்

'துப்பாக்கி'க்கு ஸ்ரீகர் பிரசாத்!



விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜம்வால், சத்யன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்காக தற்போது ஆக்ஷன் காட்சிகளை மும்பையில் படமாக்கி வருகிறார்கள். இச்சண்டை காட்சிக்காக புதுவிதமாக நிறைய விஷயங்களை கையாண்டு வருகிறாராம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

கெளதம் மேனன், இயக்குனர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மூவரின் படங்கள் என்றாலே படத்தின் எடிட்டர் ஆண்டனியாக தான் இருக்கும். ஆனால் '7ம் அறிவு' படத்தின் எடிட்டிங்கின் போது ஏ.ஆர்.முருகதாஸுக்கும் ஆண்டனிக்கும் இடையே சிறு பிரச்னையாம்.

ஆகையால் 'துப்பாக்கி' படத்தின் எடிட்டராக பணியாற்ற ஸ்ரீகர் பிரசாத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் முருகதாஸ்.  மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து', 'ராவணன்' உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் ஸ்ரீகர் பிரசாத்.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக தேசிய விருதினை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 24 February 2012

சந்தோஷ்சிவனுக்கு விஜய் கால்ஷீட்!



'நண்பன்' படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'துப்பாக்கி'. காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, கலைப்புலி. எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. பெப்ஸி பிரச்னையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் இரண்டம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தோஷ் சிவனின் வேகமான மற்றும் துல்லியமான ஒளிப்பதிவை பார்த்த விஜய் 'துப்பாக்கி' படத்தினைத் தொடர்ந்து தனது கால்ஷீட் தேதிகளை சந்தோஷ் சிவன் இயக்கும் படத்திற்கு கொடுத்து இருக்கிறார்.

இப்படத்தினை யார் தயாரிக்க இருக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய்!



விஜய் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்த படம் 'போக்கிரி'. படத்தில் இறுதிகட்ட காட்சியில் தான் அவர் போலீஸ் அதிகாரி என தெரியவரும்.  முழுப்படத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்தது இல்லை.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'துப்பாக்கி' படம் முழுவதுமே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் விஜய். முதற்கட்டமாக மும்பையில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

'துப்பாக்கி' படத்தின் முக்கால்வாசி கதை மும்பையில் நடைபெறுவது போன்று அமைத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்திற்காக பெண் பார்க்கும் காட்சியை ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அக்காட்சியில் விஜய் போலீஸ் உடை அணிந்து காஜல் அகர்வாலை பார்க்க போவது போன்று காட்சி அமைத்து இருக்கிறார்கள்.

தற்போது நடைபெற்று வரும் பெப்ஸி பிரச்னையால் படப்பிடிப்பு தடைப்பட்டு இருக்கிறது. இந்நேரத்தில் 'துப்பாக்கி' படத்தில் தனது வேடத்திற்கு ஏற்றவாறு தனது உடம்பை மாற்றி வருகிறாராம்

Tuesday, 21 February 2012

சென்னை ரைனோஸ் அணிக்கு விஜய் கொடுத்த பார்ட்டி!


சினிமா நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த ஜனவரி 13-ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 12-ஆம் தேதி வரை நடைபெற்றது.சினிமா நட்சத்திரங்கள் தங்களது மொழி வாரியாக பிரிக்கப்பட்டு அவரவர் அணிக்காக விளையாடினர்.
இந்த தொடரில் விஷால் தலைமையில் களம் இறங்கிய தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணி சிறப்பாக விளையாடி கோப்பையை கைபற்றியது. சென்னையில் தெலுகு வாரியர்ஸ் அணியை எதிர்த்து சென்னை ரைனோஸ் விளையாடிய செமி பைனல் மேட்சை நடிகர் விஜய் கலந்து கொண்டு உற்சாகத்துடன் பார்த்து ரசித்தார்.
சென்னை அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் சென்னை ரைனோஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆட்டநாயகர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளார்.
இந்த பார்ட்டியில் சில நடிகைகளும் கலந்து கொண்டுள்ளார்கள்.

Wednesday, 15 February 2012

துப்பாக்கி படத்தில் விஜயுடன் ஜெய் ..!



கடல் மீனை பிடிச்சு வாய்காலில் விட்ட மாதிரி, திசை தப்பி திண்டாடிக் கொண்டிருக்கிறார் ஜெய். சுப்ரமணியபுரம் என்ற ஒரே ஒரு ஹிட்டுக்கு பின் தாறு மாறாக தாண்டவம் ஆடிய ஜெய்யை அப்படியே ஓரம் கட்டி ஆசுவாசப்பட்டுக் கொண்டது கோடம்பாக்கம். அவரும் நிலைமையை புரிந்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டதுடன், ஆகாயத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தார்.
ஏகப்பட்ட இடைவெளிக்கு பின் எங்கேயும் எப்போதும் வந்தது. மறுபடியும் ‘தாண்டவக்கோனே’ ஆகிவிட்டார் ஜெய். போன் வந்தால் எடுப்பதில்லை. நேரில் கண்டால் சிரிப்பதில்லை என்று ஒரே கம்ப்ளைண்ட் உதவி இயக்குனர்கள் மத்தியிலும், தயாரிப்பாளர்கள் மத்தியிலும். சம்பளத்தையும் ‘ஒன் சி’ கேட்கலாமே என்று ஏற்றிவிட்டார்களாம் உடனிருந்த நண்பர்கள். அதற்கேற்றார் போல ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார் ஜெய்.
இந்த நேரத்தில்தான் இன்னொரு சங்கடம் அவருக்கு. ஜெய்யை பொருத்தவரை மீட்பர், மேய்ப்பர் எல்லாமே முருகதாஸ்தான். ஏனென்றால் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் இவருக்கு வாய்ப்பு தந்ததே முருகதாஸ்தான். எனவே அவர் இயக்கி வரும் துப்பாக்கி படத்தில் ‘ஒரு கேரக்டர் இருக்கு. நடிக்கணும்’ என்றதும் கேள்வியே கேட்காமல் ஒப்புக் கொண்டார்.
விஜய் என்ற பெரிய ஹீரோ நடிக்கும் படத்தில் ஜெய் என்ற சிறிய ஹீரோவுக்கு என்ன வேலை இருக்கும்? பதற்றத்தை எப்போதும் முகத்தில் தேக்கி வைத்தபடியே வேலை பார்க்கிறாராம் ஜெய்.துப்பாக்கியை பொருத்தவரை ஜெய்க்கு கெஸ்ட் ரோல்தான்

விஜய்க்கு வில்லனா?


'நண்பன்' படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

'துப்பாக்கி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜெயராம்.

ஜெயராம் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் 'பொன்னர் சங்கர்'. மலையாள திரைப்படங்களில்  பிஸியாக இருக்கும் ஜெயராம் தமிழில் நல்ல வேடங்கள் வந்தால் மட்டுமே நடித்து வந்தார்.

'துப்பாக்கி' படத்தில் ஜெயராமிற்கு விஜய்க்கு இணையான வேடம் கொடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் சங்கம் - பெப்ஸி பிரச்னை முடிந்தவுடன் நடைபெற இருக்கும் 'துப்பாக்கி' படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் ஜெயராம்.

சரோஜா, தாம் தூம் படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெயராம். இப்படத்தில் அவர் வில்லனா இல்லையா என்பது சஸ்பென்ஸாம் !

Tuesday, 14 February 2012

விஜயின் பாட்டி மரணம்!



ஷோபா சந்திரசேகரனின் அம்மாவும் விஜய்யின் பாட்டியுமான லலிதா நீலகண்டன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.
லலிதா நீலகண்டனின் பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தி, பல படங்களைத் தயாரித்துள்ளனர். அவற்றை பெரும்பாலும் லலிதாவின் மருமகன் எஸ்ஏ சந்திரசேகரனே இயக்கினார்.
லலிதா நீலகண்டனுக்கு இரண்டு மகன்கள். பாடகரும் நடிகருமான எஸ் என் சுரேந்தர் மற்றும் சுந்தர். இரண்டு மகள்கள் ஷோபா சந்திரசேகரன் மற்றும் ஷீலா. ஷோபாவின் மகன் நடிகர் விஜய். ஷீலாவின் மகன் நடிகர் விக்ராந்த்.
பாட்டி மீது மிகுந்த பாசமாக இருந்தார் விஜய். மகள் ஷோபா- மருமகன் சந்திரசேரனுடன் வசித்து வந்த லலிதா நீலகண்டனுக்கு நேற்று நெஞ்சுவலி வந்தது. அவரை விஜயா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் இன்று காலை அவர் மரணமடைந்தார்.
அவருக்கு நுங்கம்பாக்கம் தெரஸா சர்ச்சில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. மாலையில் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. லலிதா நீலகண்டனுக்கு விஜய் ரசிகர்கள், திரையுலகினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Saturday, 4 February 2012

ரசிகர்கள் தான் எனது நண்பர்கள்-விஜய்



நண்பன் படம் வெற்றியின் மூலம் உற்சாகத்தில் இருக்கும் நடிகர் விஜய், எனது ரசிகர்கள் தான் எனது நண்பர்கள் என்று கூறியுள்ளார். இந்தியில் வெளிவந்த 3-இடியட்ஸ் படத்தை விஜய், ஸ்ரீகாந்த, ஜீவா ஆகியோரை வைத்து நண்பன் என்ற பெயரில் ரீ-மேக் செய்தார் ஷங்கர். சமீபத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் நண்பன் டீமே மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. இந்நிலையில் நண்பன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் கோவை வந்திருந்தார் நடிகர் விஜய். அப்போது ஆதரவற்ற முதியோர் இல்லத்தை சேர்ந்த சுமார் 100பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், அங்கு படிக்கும் மாணவர்கள் இருவருக்கு லேப்டாப்பும் வழங்கினார். பின்பு அங்குள்ள தியேட்டரில் ரசிகர்கள் முன்பு தோன்றி நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், நண்பன் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் ரசிகர்கள் தான். அவர்கள் தான் எனது நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி என்று கூறினார்

Thursday, 2 February 2012

ஸ்டிரைக் முடிந்ததும் 'துப்பாக்கி' ஷூட்டிங் ! : ஏ.ஆர்.முருகதாஸ்


'நண்பன்' படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடைபெற்று வந்தது. 'நண்பன்' படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் இருந்ததால் 'துப்பாக்கி' படப்பிடிப்பு சற்று தள்ளிவைக்கப்பட்டது. 

'நண்பன்' வெளியான சமயத்தில் பெப்சி - தயாரிப்பாளர் சங்கத்தின் பிரச்னையால், 'துப்பாக்கி' படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 'நண்பன்' படத்தில் விஜய்யின் நடிப்பை பார்த்துவிட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் இணையத்தில் " விஜய் 'நண்பன்' படத்தில் அருமையாக நடித்து இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் ஸ்டிரைக் முடிந்தவுடன் அவருடன் பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது " என்று கூறியுள்ளார்.

விஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி !

அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா - 2', விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'துப்பாக்கி' இவ்விரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் வித்யூத் ஜாம்வால்.

ஒரே சமயத்தில் தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் நாயகர்களுடன் நடித்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார் வித்யூத். இது குறித்து வித்யூத் கூறியிருப்பது :

" ஒரே சமயத்தில் விஜய் மற்றும் அஜீத் இருவருடனும் நடித்து வருவது சந்தோஷமாக இருக்கிறது.   

'பில்லா 2' படத்திற்காக ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கினோம்.  ஆங்கில சினிமாவில் தான் அதுமாதிரியான சண்டைக் காட்சிகளைப் பார்க்க முடியும்.  இந்திய சினிமாவில் முதன் முறையாக அதுபோல் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கி இருக்கிறோம்.  இந்த சண்டைக்காட்சியில் நான் நடித்ததில் பெருமைப்படுகிறேன். 

அஜீத் மிகவும் எளிமையான மனிதர். பல விஷயங்கள் குறித்தும் தெளிவான பார்வை உடையவர். விஜய்யுடன் நடிக்கும்போது  மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு ரசிகர்கள் இருந்தும் இன்னும் தன் தொழிலில் மிகச் சிரத்தையுடன் இருக்கிறார். "

Saturday, 28 January 2012

விஜய்யுடன் இனையும் தனுஷ்



தனுஷ் முதல் முதலாக ஹித்தியில் கலம் இறங்கும் திரைப்படம் ராஞ்சனா இது தனுஷ்க்கு மட்டும் முதல்
படம் அல்ல விஜய்க்கும் தான் இது தான். கோடம்பாக்கத்தின் HOT NEWS இத்த திரைப்படத்தில் தனுஷ் கதாநயகானக நடிக்க இருக்கிறார் இத் திரைப்படதில் வில்லனாக நடிக்க விஜய்யிடம் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் கதை கூறியுள்ளார் . இத் திரைப்படத்தில் வில்லனுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்க பட்டுள்ளதம் ... 
இத்திரைப்படதுக்காக விஜய்க்கு பேசபட்ட சம்பளம் 30 கோடிக்குமேல்.ஆனால் விஜய் இந்த படத்தில் நடிப்பார என சரிவர தெரியவில்லை.விஜய்கு வில்லனாக நடிக்கவேண்டும் என்ற ஆசை உண்டு கதை பிடித்தல் இந்த படத்தில்
விஜய் நடிப்பது உறுதி . கூடிய சிக்கிரம் விஜய்யும் தனுஷ்ய்யும் ஒரே திரையில் பாக்கலாம்.

Monday, 23 January 2012

ஈகோ இல்லை ! : கமல்

தனது மாஸ் ஹீரோ இமேஜ் விட்டு விஜய் நடித்து இருக்கும் படம் 'நண்பன்'. இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்று இருப்பது விஜய்யை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 

தன் 'விஸ்வரூபம்' பட பணிகளில் மும்முரமாக இருந்த கமல்ஹாசன் பார்ப்பதற்கென்று 'நண்பன்' படத்தின் பிரத்யேக காட்சியை ஏற்பாடு செய்தார் விஜய். கமல் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை  (ஜன 21 ) இரவு 'நண்பன்' திரைப்படத்தைப் பார்த்தார்.

நண்பன் படத்தினை பார்த்துவிட்டு படக்குழுவினரையும் விஜய்யையும் வெகுவாக பாராட்டினார் கமல்.

' நண்பன்' படம் குறித்து கமல்  " விஜய், ஷங்கர், படத்தின் தயாரிப்பாளர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

ஒரு பெரிய நடிகர் செய்த படத்தினை ரீமேக் செய்யும் போது, ஒரு COMPARSION வரும். அப்படி செய்து இருக்கலாம், இப்படி செய்து இருக்கலாம் என்று கூறுவார்கள். 

நான் ' 3 இடியட்ஸ்'  படத்தினை  சில பகுதிகள் மட்டும் தான் பார்த்தேன். விஜய் தனக்கு ஏற்றது போல் பாத்திரத்தை மாற்றிக் கொண்டது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. இது ஷங்கர், விஜய் என இருவரின் முயற்சி. அவர்களின் முயற்சிக்கு நல்ல களம் அமைத்து கொடுத்த தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள்.

விஜய்யுடன் நண்பர்களாக நடித்து இருப்பவர்கள், நல்ல நட்பை பார்த்த சந்தோஷத்தை ஏற்படுத்துகிறார்கள். நான் தான் நாயகன் என்ற ஈகோ படத்தில் தெரியவே இல்லை. 

நிறைய MULTI STARRER படங்கள் வர வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான ஆரம்பமாக 'நண்பன்' படம் இருக்கும். மக்களும் இப்படத்திற்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். " என்று தெரிவித்துள்ளார்.

Sunday, 22 January 2012

விஜய்யின் ‘நண்பன்’ 10 நாளில் ரூ. 110 கோடி வசூல்


விஜய் நடிப்பில், பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டுள்ள நண்பன் படம் வசூல் சாதனை படைத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இதுவரை ரூ. 110 கோடியை அது வசூலித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
படம் வெளியிடப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வரவேற்புடன் ஓடி வருவதாகவும், விஜய் மற்றும் மற்றவர்களின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
படத்தில் விஜய் உள்ளிட்ட அத்தனை பேரும் இயல்பாக நடித்துள்ளதை அனைவரும் ரசிப்பதாலும், வித்தியாசமான விஜய்யைப் பார்க்க ரிபீட் ஆடியன்ஸ் எனப்படும் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும்தான் படம் பெரும் வெற்றி பெற்றிருப்பதாக கூறுகிறார்கள்.
மேலும் வசூல் சாதனைகளை இது படைக்க ஆரம்பித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். பன்ச் டயலாக்குகளில் மட்டுமல்லாமல் பாந்தமான நடிப்பாலும் தன்னால் அசத்த முடியும் என்பதை விஜய் நிரூபித்து விட்டார் என்பதுதான் இந்தப் படத்தின் டாப் ஹைலைட்டாக அமைந்துள்ளது.
விஜய் மட்டுமல்லாமல் ஜீவா, ஸ்ரீகாந்தக், சத்யன், சத்யராஜ் என மற்ற கலைஞர்களின் நடிப்புக்கும் பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
இதுவரை விஜய் நடித்து வெளியான படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்ற பேச்சும் படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைந்து விட்டது என்கிறார்கள் திரையுலகினர்.

Saturday, 21 January 2012

ஆசை நண்பனால் நிறைவேறியது ! : விஜய்


ஷங்கர் இயக்கத்தில் விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன், இலியானா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நண்பன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரித்து இருக்கிறது.

தனது மாஸ் ஹீரோ இமேஜ் விட்டு விஜய் நடித்து இருக்கும் படம் இது. 'நண்பன்' மக்களிடையே வரவேற்பை பெற்று இருப்பது விஜய்யை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

'நண்பன்' படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்தளித்த விஜய் நேற்று பத்திரிகையாளர்களிடம் தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். 

பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் பேசும்போது " நண்பன் படத்தின் வசூல் நன்றாக இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.  வசூலில் என் முந்தைய படங்கள் சாதனையை முறியடித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

எனக்கு வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்க ஆர்வம் இருந்தது. இந்தியில் '3 இடியட்ஸ்' பார்த்த போது எனக்கு மிகவும் பிடித்து விட்டது.  அதனால் அதன் அப்பட ரீமேக்கில் நடித்தேன். இது மாதிரி பாத்திரங்களில் நடிக்க கதை, இயக்குனர், தயாரிப்பாளர் என அனைத்தும் நல்லபடியாக அமைய வேண்டும். 'நண்பன்' படத்தில் அது அமைந்தது. 

இதில் ஆக்ஷன், பஞ்ச் வசனங்கள் என எதுவும் கிடையாது.  பத்து பேருடன் சண்டை போடுவது ஒரு ஹீரோயிசம் என்றால் 'நண்பன்' படத்தில் எனது பாத்திரம்  வேறு விதமான ஹீரோயிசம்.

என்னை திரையில் வித்தியாசமாக பார்க்க ஆசைப்பட்டேன். அது 'நண்பன்' படத்தின் மூலம் நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி.  'நண்பன்' படத்தில் கதைக்கு தேவைப்பட்டதால் மட்டுமே இலியானாவுடன் முத்த காட்சியில் நடித்தேன். ஸ்ரீகாந்த், ஜீவா பேன்ட் கழற்றும் சீன்கள் தவறாக தெரியவில்லை. கல்லூரி ராகிங்குகளில் நடப்பவை தான். 'நண்பன்' படத்தின் மூலம்  ஸ்ரீகாந்த், ஜீவா இருவருமே எனக்கு நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.

தற்கால கல்வி முறையின் தவறுகள் நண்பன் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அதைப் படிக்க அனுப்ப வேண்டும். எனது அப்பா என்னை டாக்டராக்க ஆசைப்பட்டார். எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சினிமாவுக்கு வந்து விட்டேன்.

எனது மகனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'துப்பாக்கி' படத்தில் நடித்து வருகிறேன். 'துப்பாக்கி' படத்தில் எனது ரசிகர்கள் அடுத்து ஒரு வித்தியாசமான விஜய்யை பார்ப்பார்கள்.

' நண்பன்' படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்த முதலமைச்சருக்கு படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். " என்று கூறினார்.

100 கோடியை நோக்கி !: நண்பன்


ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் 'நண்பன்'. இந்தியில் வரவேற்பை பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் என்பதால் படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது.  அதனை பூர்த்தி செய்யும் வகையில் 12ம் தேதியே படத்தினை வெளியிட்டார்கள்.

தமிழகத்தில் மட்டும் 625 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது நண்பன்.

முதல் வாரத்தில் சுமார் 40 கோடியை கல்லா கட்டியிருக்கிறது நண்பன். படம் வெளியான முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து திரையரங்குகளிலும் 95% நிரம்பியதால் எதிர்ப்பார்த்தை விட நல்ல வசூலாம். 

'எந்திரன்' படத்தினை அடுத்து அதிக திரையரங்குகள், மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு, கேரளா, வெளிநாட்டு உரிமை, தெலுங்கு டப்பிங் உரிமை, இசை உரிமை, டிவி உரிமை என அனைத்தையும் கணக்கிட்டால் 100 கோடியை தாண்டுவது உறுதி என்கிறார்கள் தமிழ் திரையுலகில்.

இதுவரை எந்த ஒரு விஜய் படத்திற்கும் கொடுக்காத விலையை கொடுத்து ' நண்பன் ' படத்தின்  தொலைக்காட்சி உரிமையை வாங்கி இருக்கிறது விஜய் டிவி என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 19 January 2012

துப்பாக்கியில் இன்னோரு தோட்டா !



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'துப்பாக்கி'. விஜய், காஜல் அகர்வால் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

'ஸ்மாக் தட்' என்ற ஒரே ஆல்பத்தின் மூலம் இசை உலகில் புகழின் உச்சத்திற்கு சென்றவர் அகான். முதன் முதலாக இந்தி திரைப்படமான 'ரா.ஒன்' படத்தில் 'சம்மக் சலோ..' என்ற பாடலை பாடினார்.  அப்பாடல் இந்தி திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றது.

மும்பை வழியே சென்னைக்குள்ளும் நுழைகிறது அகான் குரல்.  அகான்  'துப்பாக்கி' படத்திற்காக ஒரு பாடலை பாட இருக்கிறார். இப்பாடல் பதிவு விரைவில் சென்னையில் நடைபெற இருக்கிறது.

ரா.ஒன் 'சம்மக் சலோ' பாடலைவிட  அதிகமாக இப்பாடல் வரவேற்பை பெற வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறாராம் ஹாரிஸ்.

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன், ஹாரிஸ் ஜெயராஜ், அகான் என தோட்டாக்களை நிரப்பி வருகிறது 'துப்பாக்கி' !

Wednesday, 11 January 2012

பிரெஞ்சு மொழியில் வெளியாகும் முதல் தமிழ் படம் – விஜய்யின் ‘நண்பன்’


ஷங்கரின் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் “நண்பன்” படம் பிரான்ஸ் நாட்டில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இப்படத்தில் இலியானா , ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

நண்பன் பொங்கல் விருந்தாக திரையிடப்படுகிறது. இப்படத்தின் முன் பதிவு ஜனவரி 8 ஆம் தேதியன்று தொடங்கியது. இந்த இரு தினங்களுக்குள், அணைத்து தியேட்டர்களிலும் இரண்டு நாட்களுக்கு புக்கிங் முடிந்துவிட்டது. மேலும் படத்தினை பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்சு மொழியின் சப் டைட்டிலோடு வெளிவர போகிறது என்ற புதிய தகவலும் கிடைத்துள்ளது. பிரான்சில் வெளியாகும் முதல் தமிழ் படம் இதுவேயாகும். இந்த வரவேற்பால் மிக்க சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு.

நகைச்சுவை, காதல் மற்றும் ஆக்சன் கலந்த கலவையாக இருக்கும் இப்படம், எல்லா மக்களையும் கவரும் என்று இயக்குனர் நம்பிக்கையோடு கூறுகிறார் ஷங்கர்.

Tuesday, 10 January 2012

விஜய்க்காக ' தளபதி ANTHEM ' !


தனுஷ் WHY THIS KOLAVERI பாடல் மூலம் பிரபலமாகி விட்டார். சிம்பு A LOVE ANTHEM FOR WORLD PEACE என 96 மொழிகளில் காதல் என்ற வார்த்தைகளை கோர்த்து ஒரு பாடலாக தொகுத்து வெளியிட இருக்கிறார்.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள், விஜய்க்காக 'THALAPATHY ANTHEM' என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள்.

'எங்கேயும் எப்போதும்' படத்தில் வரும் பஸ் காட்சிகளில் கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். டிவிட்டர் இணையத்தில் இது குறித்து விஜய் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்.

விஜய்யின் ‘நண்பன்’ நிகழ்த்திய சாதனை


ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ள நண்பன் படத்திற்கான டிக்கெட்டுகள் இன்று காலை முதல் பெரும்பாலான தியேட்டர்களில் விற்பனையாகத் தொடங்கின. காத்திருந்த பெரும்பாலான ரசிகர்கள் ஜனவரி 12 ஆம் தேதியே படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் டிக்கெட் வாங்க வந்திருந்தனர். ஆனால் ரசிகர் மன்றத்தினரே ஜனவரி 12 அன்றைய டிக்கெட்டுகளை தியேட்டர்களில் மொத்தமாக வாங்கிவிட்டனர். அன்றைய டிக்கெட் கிடைக்காதவர்கள், மறுநாள் டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். பொங்கல் விடுமுறை தினங்களின் டிக்கெட்டுகளும் வேகமாக விற்பனையாவதாக தியேட்டர் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையின் பிரபல தியேட்டர் ஒன்றுக்கு நண்பன் படத்திற்கு டிக்கெட் வாங்க வந்த ரசிகர் ஒருவரிடம் நாம் விசாரித்தபோது, ‘ஜனவரி 12 அன்று முதல்நாள் நண்பன் படத்தைப் பார்க்க வேண்டும் என்று எண்ணி டிக்கெட் வாங்க வந்தேன். இங்கு கிடைக்கவில்லை. வேறு திரையரங்கில் போய் டிக்கெட் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்’ என்று தெரிவித்தார். ‘முதல் நாள் டிக்கெட்டுகளை தியேட்டர்காரர்கள் பதுக்கிவைத்துவிட்டு அன்று பிளாக்கில் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்துவிடுவார்கள்’ என்று தியேட்டர்காரர்களையும் அவர் குறை சொன்னார்.

Monday, 9 January 2012

விஜய் பற்றி ஏ.ஆர் முருகதாஸ்...


விஜய்யின் நடிக்கும் நண்பன் பொங்கல் ரிலீசுக்கு தயாராக இருக்க நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இந்தியாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கைவண்ணத்தில் விஜய் நடிக்கும் அதிரடி காட்சிகளை படமாக்கி வருகிறார் முருகதாஸ்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யின் உற்சாகத்தையும் உழைப்பையும் பார்த்த முருகதாஸ் தன் நட்பு வட்டாரத்தில் விஜய்யை வியந்து பாராட்டி வருகிறாராம்.

ஹிந்தியில் வில்லனாக இளைய தளபதி விஜய்!!


வேலாயுதம் வெற்றி விஜயை உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளது.விஜய்க்கு ஹிந்தி பட வாய்ப்பு ஒன்று வந்து உள்ளது.ஆனால் இந்த வாய்ப்பு ஹீரோவாக அல்ல வில்லனாக.
இந்த படத்தில் ஹீரோ யார் என்று சரிவர தெரியவில்லை.ஆனால் இந்த படத்திற்கு விஜய்க்கு பேசப்பட்ட சம்பளம் 30 கோடிக்கு மேல்.ஆனால் விஜய் இந்த படத்தில் நடிப்பாரா என சரிவர தெரியவில்லை.
விஜய்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு கதை பிடித்தால் இந்த படத்தில் விஜய் நடிப்பது உறுதி