.label-size a:hover { text-decoration: none; }

Pages

page

Tuesday, 10 January 2012

விஜய்யின் ‘நண்பன்’ நிகழ்த்திய சாதனை


ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ள நண்பன் படத்திற்கான டிக்கெட்டுகள் இன்று காலை முதல் பெரும்பாலான தியேட்டர்களில் விற்பனையாகத் தொடங்கின. காத்திருந்த பெரும்பாலான ரசிகர்கள் ஜனவரி 12 ஆம் தேதியே படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் டிக்கெட் வாங்க வந்திருந்தனர். ஆனால் ரசிகர் மன்றத்தினரே ஜனவரி 12 அன்றைய டிக்கெட்டுகளை தியேட்டர்களில் மொத்தமாக வாங்கிவிட்டனர். அன்றைய டிக்கெட் கிடைக்காதவர்கள், மறுநாள் டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். பொங்கல் விடுமுறை தினங்களின் டிக்கெட்டுகளும் வேகமாக விற்பனையாவதாக தியேட்டர் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையின் பிரபல தியேட்டர் ஒன்றுக்கு நண்பன் படத்திற்கு டிக்கெட் வாங்க வந்த ரசிகர் ஒருவரிடம் நாம் விசாரித்தபோது, ‘ஜனவரி 12 அன்று முதல்நாள் நண்பன் படத்தைப் பார்க்க வேண்டும் என்று எண்ணி டிக்கெட் வாங்க வந்தேன். இங்கு கிடைக்கவில்லை. வேறு திரையரங்கில் போய் டிக்கெட் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்’ என்று தெரிவித்தார். ‘முதல் நாள் டிக்கெட்டுகளை தியேட்டர்காரர்கள் பதுக்கிவைத்துவிட்டு அன்று பிளாக்கில் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்துவிடுவார்கள்’ என்று தியேட்டர்காரர்களையும் அவர் குறை சொன்னார்.

No comments:

Post a Comment