page
Tuesday, 27 December 2011
Saturday, 24 December 2011
விஜய்க்கு வில்லனான கௌதம்
இதுவரை தமிழ் சினிமாவுக்கு கேரளாவில் இருந்து அழகழகான நடிகைகள்தான் இறக்குமதியானார்கள். வில்லன்கள் எப்போதாவது ஒருமுறைதான் வருவார்கள். விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடிக்க வைக்க கேரளாவில் இருந்து ஒரு வில்லன் நடிகரை அழைத்து வந்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனாக யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பத்திலேயே சில நாட்களை கடத்திவிட்டார் இயக்குநர் முருகதாஸ். கடைசியில் அவர் கையில் சிக்கியது கௌதம். இவர் மலையாளப் படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்தவர். மோகன்லாலுடன் பல படங்களில் எதிரும் புதிருமாக மோதியவர். இவரை விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடிக்க வைப்பதற்காக அழைத்து வந்திருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ். திலகன், ராஜன்பிதேவ் இந்த வரிசையில் கௌதம் இடம்பிடிப்பாரா?
Thursday, 15 December 2011
விஜய் படத்தில் நடிக்க ஆவலாக காத்திருக்கிறேன் : பிரியங்கா சோப்ரா!
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் பிரியங்கா சோப்ரா முதன் முதலில் தமிழில் தான் அறிமுகமானார். இளைய தளபதி விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் அறிமுகமான பிரியங்கா, இளைய தளபதியை புகழ்ந்து தள்ளியுள்ளார். தன்னுடைய சினிமா கேரியர் விஜய்யுடன் ஆரம்பித்ததாக கூறிய பிரியங்கா, மீண்டும் விஜய் பட வாய்ப்பு வந்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தில் விஜய்-க்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக காஜல் அகர்வாலை தேர்வு செய்தார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது அதே 2வது ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தால் கூட தான் நடிக்க தயார் என பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் விஜய் படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பிரியங்கா கூறினார்.
Tuesday, 13 December 2011
'யோஹன்' சர்வதேச சினிமா ! : கௌதம் மேனன்
விஜய் - கெளதம் மேனன் இணைய இருக்கும் படம் 'யோஹன்'. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. படத்தின் போஸ்டர்கள் வெளியான சமயத்தில் இருந்தே இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் வெளியாகும் என கெளதம் மேனன் கூறியிருக்கிறார். போட்டான் கதாஸ் நிறுவனத்துடன் இணைந்து ஈராஸ் நிறுவனமும் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது.
இதுகுறித்து கெளதம் மேனன் கூறியிருப்பது " நான் யோஹன் படம் எப்போது துவங்கும் என பெரும் ஆர்வத்துடன் இருக்கிறேன். வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு ஒரு முழு நீள ஆக்ஷன் திரைப்படத்தினை இயக்க இருக்கிறேன்.
விஜய்யுடன் முதன் முறையாக இணைந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. யோஹன் ஒரு சர்வதேச சினிமா. இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்காக ஒரு தீம் பாடலை இப்போதே தயார் செய்து விட்டார். " என்று தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் " போட்டான் கதாஸ் மற்றும் ஈராஸ் நிறுவனத்துடன் யோஹன் படத்தில் இணைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கெளதமிற்கும் எனக்கும் இப்படம் புதிய களம். மக்களுக்கு பிடிக்கக்கூடிய, வித்யாசமான பாடல்களுடன் வருவோம் என நம்புகிறேன் " என்று கூறியுள்ளார்.
2012 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டுள்ளார்கள்

Monday, 12 December 2011
மீண்டும் பாடகராகிறார் இளைய தளபதி விஜய்!.
இளைய விஜய் இயக்குனர் விஜயின் படத்தில் நடிக்க உள்ளார். விஜய் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படம் தொடங்க உள்ளதை தனது டுவிட்டரில் தெரிவித்தார். இப்படதிற்குரிய முற்பணத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கி விட்டதாகவும் அறிவித்தார்.
விஜய், ஜி.வி.பிரகாஷ்குமார் இணைவது இதுவே முதல் முறையாகும். இப்படத்தில் விஜயை கண்டிப்பாக பாடவைப்பேன் என ஜி.வி.பிரகாஷ்குமார் கூறியுள்ளார். எனவே மீண்டும் விஜயின் குரலில் பாடலை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். விஜய் ஏற்கனவே பாடிய பாடல்கள் ஹிட் அடைந்தது என்பது குறிபிடதக்கதாகும்.

Sunday, 11 December 2011
சின்ன திரையில் இளையதளபதி ..!
விஜய் டிவியில் நடக்க இருக்கும் 'நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரர் ' என்ற நிகழ்ச்சியை இளையதளபதி விஜய் நடத்த இருக்கிறார் என்ற தகவல் பல மாதங்களிற்கு முன் வந்த தகவல்.
ஆனால் நேற்று முதல் இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என்ற விளம்பரத்தை விஜய் டிவி போட்டு வருகின்றது ஆகவே தளபதி ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து ரசிகர்களும் பொதுமக்களும் விஜய்யை சின்னத் திரையில் பார்க்க ஆவலாக இருக்கின்றோம்.
Subscribe to:
Posts (Atom)