.label-size a:hover { text-decoration: none; }

Pages

page

Thursday, 15 December 2011

விஜய் படத்தில் நடிக்க ஆவலாக காத்திருக்கிறேன் : பிரியங்கா சோப்ரா!


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் பிரியங்கா சோப்ரா முதன் முதலில் தமிழில் தான் அறிமுகமானார். இளைய தளபதி விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் அறிமுகமான பிரியங்கா, இளைய தளபதியை புகழ்ந்து தள்ளியுள்ளார். தன்னுடைய சினிமா கேரியர் விஜய்யுடன் ஆரம்பித்ததாக கூறிய பிரியங்கா, மீண்டும் விஜய் பட வாய்ப்பு வந்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தில் விஜய்-க்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக காஜல் அகர்வாலை தேர்வு செய்தார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது அதே 2வது ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தால் கூட தான் நடிக்க தயார் என பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் விஜய் படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பிரியங்கா கூறினார்.

No comments:

Post a Comment