இது இந்தி ரீ-மேக் படமா இருந்தாலும், ஷங்கர் சார் அதைத் தமிழுக்குத் தகுந்த மாதிரி அழகான அனுபவமா மாத்தி இருக்கார். பல வெற்றிகளுக்குப் பிறகும் எளிமையா இருப்பது, படப்பிடிப்புக்கு முன்தயாரிப்புகளோட வர்றதுனு ஷங்கர் சாரோட வெற்றிக்கு ஏகப் பட்ட காரணங்கள். 'ஷங்கர் சார் ஷூட்டிங் ஸ்பாட்டை இவ்வளவு கலகலப்பா இதுக்கு முன்னே பார்த்ததே இல்லை’னு எல்லோரும் சொல்றாங்க. அப்படி ஸ்ட்ரிக்ட்டான ரூல்ஸ் ரெகுலேஷன் முன்னாடி இருந்ததுபோல. நாங்க போய் எல்லாத்தையும் உடைச்சுட்டோம்!''
''நாலு வார்த்தைகளில் கேள்வி கேட்டால், இரண்டு வார்த்தைகளில் பதில் சொல்வது விஜய் வழக்கம். மனிதர் ஸ்பாட்ல எப்படி?''
''விஜயைவிட நான் 10 வயசு சின்னவன். ஆனா, மனிதர் அவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருப்பார். ஏதாவது சீரியஸான ஷாட்டுக்கு முன்னாடி அவரைப் பயங்கரமாக் கலாய்ச்சுடுவேன். 'டேய்... நீ தயவுசெஞ்சு பக்கத்துல நிக்காதடா! டேஞ்சரஸ் ஃபெலோ நீ!’னு ஜாலியா மிரள்வார். ஒருமுறை அந்தமானில் படகில் போயிட்டு இருக்கும்போது... பேய் மழை. எந்தத் தீவில் இருக்கோம்னு தெரியாத அளவுக்கு கும்மிருட்டு. 'டேய்... இங்கேயே ஏதாவது நண்டு நத்தைகளைப் பிடி. சுட்டுச் சாப்பிட்டுப் பொழுதைக் கழிப்போம்’னு சொல்லிட்டு, ஜாலியா இருந்தார் விஜய்
No comments:
Post a Comment