இளைய தளபதி விஜய் கொலிவுட்டில் 'வேலாயுதம்', 'நண்பன்' போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.
தற்போது இயக்குனர் கெளதம் மேனன், நாயகன் ஜீவா-நாயகி சமந்தா நடிப்பில் உருவாகும் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் மும்மரமாக இருக்கின்றார்.
அடுத்த வருட துவக்கத்தில் 'யோஹன்' படத்துக்கான வேலைகள் துவங்கும் என்பதால் இப்போதிலிருந்தே படத்தின் நாயகன் விஜய் தயாராகி வருகிறார் என்கிறது பட வட்டாரம்.
விஜய்க்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் இது வித்தியாசமான படமாக இருக்கும். தனது பாணி படங்களில் இருந்து விஜய் சற்று விலகி, கொலிவுட்டின் முன்னணி இயக்குனர்களான ஷங்கர், கெளதம் மேனன், முருகதாஸ் ஆகியோரின் படங்களில் வித்தியாசமாக முயற்சிக்க களமிறங்கியுள்ளார்.
இதனால் விஜய்யின் 'நட்சத்திர நாயகன்' அந்தஸ்து மேலும் பல மடங்கு மிளிரும் என பட வட்டாரம் எதிர்பார்க்கிறது.
No comments:
Post a Comment