ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் என்ற செய்தி வெளியானதில் இருந்து அப்படத்தினை பற்றி தினமும் ஒவ்வொரு செய்தி வெளியாகி வருகிறது.
படத்தினை விஜய்யின் அப்பா சந்திரசேகரனும் ஆஸ்கார் ரவிச்சந்திரனும் சேர்ந்து தயாரிக்கிறார்கள். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் படத்தினை வெளியிட இருக்கிறது. KINGFISHER CALENDAR மாடலான ஏஞ்சலா ஜான்சனை இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.
புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து சந்தோஷ் சிவன் " ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தி 'கஜினி' படத்திற்கே நான் ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது. சிலபல காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. விஜய்யின் படங்கள் எனக்கு பிடிக்கும். இந்த இருவரும் இணையும் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றப் போவதில் எனக்கு சந்தோஷம்.
நான் இயக்க இருந்த 'சிலோன்' படத்தினை துவங்க சில காலம் ஆகும். அந்த இடைவெளியில் இந்த படத்தின் ஒளிப்பதிவினை மேற்கொள்ள இருக்கிறேன். படத்தினை விரைவில் துவங்க இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் விஜய் மற்றும் ஏஞ்சலா இருவரையும் வைத்து சந்தோஷ் சிவன் இப்படத்திற்காக ஃபோட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
No comments:
Post a Comment