.label-size a:hover { text-decoration: none; }

Pages

page

Friday, 9 December 2011

நண்பன் படத்தில் பில்லா 2 டிரெய்லர் தல தளபதி அதிரடி முடிவு!


வரும் தைத்திருநாளில் நண்பன் படம் வெளியாகும் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
விஜய் ,ஸ்ரீகாந்த் ,ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் நண்பன் படத்தின் இடைவெளியில் பில்லா 2 டிரெய்லர் ஒளிபரப்ப படும் என்று அஜித்தும் விஜய்யும் முடிவு செய்துள்ளனர்.
தல தளபதி இருவரும் நல்ல நண்பர்கள்.அதேபோல் ரசிகர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஆசை.ரசிகர்கள் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

Thursday, 8 December 2011

மொதல்ல வேலை.. அப்பறம் தான் விளம்பரம் !


விஜய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

விஜய் நடித்த 'சச்சின்' படத்தினை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தினை தயாரிக்கிறார். படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு துவங்கிய நாளில் படத்தின் விளம்பரங்கள் பேப்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எவ்வித விளம்பரமும் இல்லாமல் படப்பிடிப்பை துவங்கி விட்டார்கள். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர் படத்தை பிரபலப்படுத்த துவங்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம்.

ஏழாம் அறிவு படத்தின் அதிகாரபூர்வமான விளம்பரம் வெளிவரும் முன்பே படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. அதனால், இப்படத்தைப் பற்றி  எந்த ஒரு தகவலும் வெளியாவதை விரும்பவில்லையாம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

விஜய் விஜய் உறுதியானது புதிய கூட்டணி!



இளையதளபதி விஜய் ரொம்பவே மாறிவிட்டார். தொடர்ந்து மசாலா படங்களில் நடித்து வந்த விஜய், தற்போது ஷங்கர் இயக்கத்தில் மல்ட்டி ஸ்டாரர் படமான ‘நண்பனில்’ நடித்து முடித்திருகிறார்.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘துப்பாக்கி’ படத்தில் மும்மையில் நடித்து வருகிறார். அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் யோஹன் படத்தில் நடிக்க இருகிறார். இதற்கிடையில் இயக்குனர் ஏ.எல். விஜயும், இளையதளபதி விஜயும் இணைய இருகிறார்கள் என்று செய்தி வெளியானாலும் அதை இளைய தளபதி விஜய் தரப்பில் உறுதிப்படுத்த வில்லை.

இந்நிலையில் கௌதம் மேனன் படத்தில் நடித்து முடித்த கையோடு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்க விஜய் கால்ஷீட் கொடுத்திருக்கும் செய்தியை உறுதிப்படுத்தியிருகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்! 

காரணம் இந்தப் படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருபவர் ஜி.வி.பிரகாஷ். விஜய் படத்துக்கு இவர்  இசையமைப்பது இதுவே முதல் முறை. இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார் பிரபல திரையுலக  நிதியாளரான சந்திர பிரகாஷ் ஜெயின்.

விஜய்+விஜய் கூட்டணியை உறுதிசெய்து  ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் " இயக்குனர் விஜய் – இளைய தளபதி விஜய் இணையும் படத்திற்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டேன். விஜய் படத்தில் பணியாற்ற இருப்பது சந்தோஷமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Saturday, 3 December 2011

நண்பனுக்காக வரும் அமீர்கான் !


விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் பொங்கல் 2012ல் வெளியாக இருக்கும் படம் ' நண்பன் '. இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ' 3 இடியட்ஸ் ' படத்தின் ரீமேக்  ' நண்பன்' .

ஷங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். இலியானா நாயகியாக நடிக்க ஜெமினி நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 14ம் தேதி நேரு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார்கள்.

3 இடியட்ஸ் படத்தின் நாயகன் அமீர்கான் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ளக்கூடும் என்கிறார்கள்.

டிசம்பர் 14ம் தேதி இசை வெளியான உடன் இப்படத்தினை தொடர்ந்து விளம்பரப்படுத்தி ஜனவரி 14ல் உலகம் முழுவதும் வெளியிட இருக்கிறார்கள்.

'துப்பாக்கி' விஜய் !


விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் எப்போது துவங்குகிறது, யார் தயாரிப்பாளர் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் நிலவி வந்தன.

தயாரிப்பாளர் தாணு தான் என்று முதலில் முடிவானது. காஜல் அகர்வால் தான் நாயகி என்று கூறி வந்தாலும் இதுவரை முறையான அறிவிப்பு எதுவும் வெளிவர வில்லை.

இந்நிலையில் இப்படத்திற்கு ' துப்பாக்கி ' என்று தலைப்பு வைத்து இருக்கிறார்கள். ' போக்கிரி ' படத்தினை அடுத்து இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன். போலீஸ் வேடத்தில் நடிக்க இருப்பதால் அதற்காக ஜிம்மிற்கு சென்று தனது உடம்பை ஏற்றி கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் வலம் வந்தன.

இத்தகவலை விஜய் மறுத்துள்ளார். எந்த கதாபாத்திரத்திற்காகவும் ஜிம்மிற்கு போய் உடலை முறுக்கேற்றிக் கொள்வது இல்லை.  நான் எப்போது ரெகுலராக உடற்பயிற்சி செய்பவன். வெளிவந்த அந்த  தகவலில் உண்மை இல்லை " என்று தெரிவித்துள்ளார்.

'துப்பாக்கி' படத்தின் முதல் பேப்பர் விளம்பரம் 5ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது தான் லேட்டஸ்ட் தகவல். 'துப்பாக்கி'க்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

Thursday, 1 December 2011

நண்பன் IS WELL




காவலன் சுப்பர் கிட் வேலாயுதம் மெகாகிட் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவர உள்ள படம் நண்பன். விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருந்த படம் நண்பன் . ஆனால் வேலாயுதம் படம் திபாவளிக்கு வந்ததால் இப்படம் பொங்கலுக்கு வெளியிட இருக்கிறது. இதில் விஜய் ஜீவா சிறிகாந்த் சத்தியராஜ் இலியானா மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் உள்ளது. இப்படத்தை ஜெமினி நிறுவனம் வெளியிடுகிறது . எந்த நிறுவனத்திடமும் வெளியீட்டு உரிமையை வழங்கவில்லை என அவ நிறுவனம் கூறியுள்ளது. இப்படத்தின் இசை வெளியிடு டிசம்பர் 10 ம் திகதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இது தொடர்பான மேலதிக தகவலை நாளை தருகிறோம் இணைந்திருங்கள்.

இளையதளபதி விஜய் முருகதாசிற்கு கூறிய ஆலோசனை



விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதி. இதன் தலைப்பு துப்பாக்கி என வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் விஜய்க்கு உடன்பாடு இல்லையாம் காரணம் இந்த தலைப்பு அவ்வளவு எதிர்பார்ப்பை கொடுக்கவில்லையாம் இதனால் இந்த தலைப்பை மாற்றும் படை முருகதாசை கேட்டுள்ளார் விஜய் . அதற்கு முருகதாஸ் ஆம் என கூறியுள்ளாராம் இதனால் முருகதாஸ் புதிய தலைப்பை தேடி வருகிறார். இப்படம் டிசம்பர் இரண்டாம் வரம் பத்திரிகை விளம்பரத்துடன் தொடங்க உள்ளது. விஜய் நடிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் முதன் முறையாக விஜய்க்கு ஜோடி சேர்கிறார். விஜயுடன் வேலாயுதம் படத்தில் ஹன்சிகா நடித்த பாத்திரத்துக்கு நடிக்க பரிந்துரைக்கப்படு பின் நீக்கபட்டர். விஜய் லிங்குசாமி இணைய இருந்த படத்திலும் இவர் பெயர் பரிந்துரைகபட்டது. எனினும் இப்படத்தில் ஜோடி சேர்வது உறுதியாகி உள்ளது. இரண்டாவது முறையாக விஜய் ஹரிஸ் இணைவது குறிபிடதக்கதாகும். நண்பன் பட சிறிய பாடல் நண்பன் பட பாடலை மேலும் கேட்க ஆசையை தூண்டுவதால் இப்பட பாடலும் கண்டிப்பாக ஹிட்டா அமையும்.