.label-size a:hover { text-decoration: none; }

Pages

page

Thursday, 8 December 2011

மொதல்ல வேலை.. அப்பறம் தான் விளம்பரம் !


விஜய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

விஜய் நடித்த 'சச்சின்' படத்தினை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தினை தயாரிக்கிறார். படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு துவங்கிய நாளில் படத்தின் விளம்பரங்கள் பேப்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எவ்வித விளம்பரமும் இல்லாமல் படப்பிடிப்பை துவங்கி விட்டார்கள். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர் படத்தை பிரபலப்படுத்த துவங்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம்.

ஏழாம் அறிவு படத்தின் அதிகாரபூர்வமான விளம்பரம் வெளிவரும் முன்பே படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. அதனால், இப்படத்தைப் பற்றி  எந்த ஒரு தகவலும் வெளியாவதை விரும்பவில்லையாம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

No comments:

Post a Comment