.label-size a:hover { text-decoration: none; }

Pages

page

Thursday, 8 December 2011

விஜய் விஜய் உறுதியானது புதிய கூட்டணி!



இளையதளபதி விஜய் ரொம்பவே மாறிவிட்டார். தொடர்ந்து மசாலா படங்களில் நடித்து வந்த விஜய், தற்போது ஷங்கர் இயக்கத்தில் மல்ட்டி ஸ்டாரர் படமான ‘நண்பனில்’ நடித்து முடித்திருகிறார்.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘துப்பாக்கி’ படத்தில் மும்மையில் நடித்து வருகிறார். அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் யோஹன் படத்தில் நடிக்க இருகிறார். இதற்கிடையில் இயக்குனர் ஏ.எல். விஜயும், இளையதளபதி விஜயும் இணைய இருகிறார்கள் என்று செய்தி வெளியானாலும் அதை இளைய தளபதி விஜய் தரப்பில் உறுதிப்படுத்த வில்லை.

இந்நிலையில் கௌதம் மேனன் படத்தில் நடித்து முடித்த கையோடு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்க விஜய் கால்ஷீட் கொடுத்திருக்கும் செய்தியை உறுதிப்படுத்தியிருகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்! 

காரணம் இந்தப் படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருபவர் ஜி.வி.பிரகாஷ். விஜய் படத்துக்கு இவர்  இசையமைப்பது இதுவே முதல் முறை. இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார் பிரபல திரையுலக  நிதியாளரான சந்திர பிரகாஷ் ஜெயின்.

விஜய்+விஜய் கூட்டணியை உறுதிசெய்து  ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் " இயக்குனர் விஜய் – இளைய தளபதி விஜய் இணையும் படத்திற்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டேன். விஜய் படத்தில் பணியாற்ற இருப்பது சந்தோஷமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment