.label-size a:hover { text-decoration: none; }

Pages

page

Saturday, 3 December 2011

'துப்பாக்கி' விஜய் !


விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் எப்போது துவங்குகிறது, யார் தயாரிப்பாளர் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் நிலவி வந்தன.

தயாரிப்பாளர் தாணு தான் என்று முதலில் முடிவானது. காஜல் அகர்வால் தான் நாயகி என்று கூறி வந்தாலும் இதுவரை முறையான அறிவிப்பு எதுவும் வெளிவர வில்லை.

இந்நிலையில் இப்படத்திற்கு ' துப்பாக்கி ' என்று தலைப்பு வைத்து இருக்கிறார்கள். ' போக்கிரி ' படத்தினை அடுத்து இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன். போலீஸ் வேடத்தில் நடிக்க இருப்பதால் அதற்காக ஜிம்மிற்கு சென்று தனது உடம்பை ஏற்றி கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் வலம் வந்தன.

இத்தகவலை விஜய் மறுத்துள்ளார். எந்த கதாபாத்திரத்திற்காகவும் ஜிம்மிற்கு போய் உடலை முறுக்கேற்றிக் கொள்வது இல்லை.  நான் எப்போது ரெகுலராக உடற்பயிற்சி செய்பவன். வெளிவந்த அந்த  தகவலில் உண்மை இல்லை " என்று தெரிவித்துள்ளார்.

'துப்பாக்கி' படத்தின் முதல் பேப்பர் விளம்பரம் 5ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது தான் லேட்டஸ்ட் தகவல். 'துப்பாக்கி'க்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

No comments:

Post a Comment