.label-size a:hover { text-decoration: none; }

Pages

page

Saturday, 1 October 2011

டெலிகாம் விளம்பரத்திற்கு விஜய்க்கு ரூ. 5 கோடி?



நடிகர் விஜய் ஒரு பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ. 5 கோடி சம்பளம் பேசியுள்ளார்களாம்.

கோலிவுட் நட்சத்திரங்கள் தற்போது அதிக அளவில் விளம்பரப் படங்களில் நடித்து வருகின்றனர். ஏர்செல் நிறுவனத்திற்கு சூர்யாவும், ஏர்டெல் நிறுவனத்திற்கு அவரது தம்பி கார்த்தியும் பிராண்டு அமாபசிடர்களாக உள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது விஜய் சேரவிருக்கிறார். அவர் ஒரு பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூ. 5 கோடி.

தற்போது வேலாயுதம் பட வேலை முடிந்துவிட்டது. நண்பன் முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து விஜய் 3 நாட்கள் நடக்கும் இந்த புதிய விளம்பரப் படத்தில் நடிக்கவிருக்கிறார்

No comments:

Post a Comment