.label-size a:hover { text-decoration: none; }

Pages

page

Saturday, 8 October 2011

டைரக்டர் ஷங்கரின் 'நண்பனை' நம்பும் கொமெடியன்



ஹிந்தி படமான 'த்ரீ இடியட்ஸ்' ஓமி வைத்யா நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் 'நண்பனில்' கொமெடி நட்சத்திரம் சத்யன் நடித்துள்ளார்.

படம் முழுதும் வருகிற மாதிரியான கதாபாத்திரத்தை எனக்கு டைரக்டர் ஷங்கர் சார் கொடுத்துள்ளார்.

இதில் இளைய தளபதி விஜய் கூட நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அவருடன் நான் ஏற்கனவே 'அழகிய தமிழ் மகன்' 'வேட்டைக்காரன்' ஆகிய இந்த இரண்டு படங்களிலும் நடித்திருக்கின்றேன்.

விஜய் நேரில்தான் அமைதியாக தெரிவார் கொமெடியில் சும்மா பின்னிடுவார். டைரக்டர் ஷங்கர் சார், சினிமா உலகில் பந்தா இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாக பழகும் 'லெஜென்ட்' அவர்.

நண்பன் படத்தின் மூலமாக எனக்கு பெரிய வாய்ப்பை தந்துள்ளார் அவர். இந்தப்படத்துக்கு பிறகு என் சினிமா கேரியர் உயரத்துக்கு போகும் என நம்புகின்றேன்.

இந்த வாய்ப்பை கொடுத்த ஷங்கர் சாருக்கு என் நன்றிகள் என்று சத்யன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment