எவ்வளவுதான் பார்த்து பார்த்து படங்களில் நடித்திருந்தாலும், கடைசியாக அதை திரையில் பார்க்கும் போது இந்த காட்சியில் இன்னும் சற்று நன்றாக நடித்திருக்காலமே என்று தோன்றும். பெரும்பாலான ஹீரோக்களின் சினிமா வாழ்க்கையில் இதுதான் நடக்கும்.
ஆனால் வேலாயுதம் படத்தை பார்த்த விஜய் இது எனக்கான பர்பெஃக்ட் படம் என்றாராம். பரம திருப்தியோடு இருக்கும் அவர் செய்த முதல் காரியம், படத்தில் பணிபுரிந்த அத்தனை உதவி இயக்குனர்களையும் அழைத்ததுதான். சுமார் பதினைந்து உதவி இயக்குனர்களுக்கு தங்க சங்கிலியும், தங்க மோதிரமும் அணிவித்து சந்தோஷப்பட்டாராம். சற்று கால தாமதமாக திரையரங்குகளை புக் பண்ண ஆரம்பித்தாலும், தமிழகம் முழுக்க நல்ல தியேட்டர்களும் அமைந்திருப்பதால் அந்த வகையிலும் திருப்திதானாம் விஜய்க்கு.
No comments:
Post a Comment