page
Wednesday, 17 August 2011
படம் சூப்பர்.. பிடிங்க 50 சவரன் ! : விஜய்
விஜய் நடித்து வரும் 'வேலாயுதம்' படத்திற்காக இன்று விஜய் - ஜெனிலியா நடனமாடும் பாடல் ஒன்றை படமாக்கி வருகிறார்கள்.
இதுவரை எடுத்துள்ள படத்தை விஜய்க்காக பிரத்யேக காட்சி ஒன்றை திரையிட்டு காட்டி இருக்கிறார்கள். படத்தை முழுவதுமாக பார்த்த விஜய், இயக்குனர் ராஜாவை கட்டிப்பிடித்து தனது பாராட்டை தெரிவித்து இருக்கிறார்.
தான் நடித்த 'கில்லி' படத்தை விட இப்படம் அருமையாக வந்துள்ளதாகவும், 'கில்லி' படத்தை விட 'வேலாயுதம்' தனது திரையுலக வாழ்வில் ஒரு மகுடமாக அமையும் என்று இயக்குனர் ராஜாவை புகழ்ந்து இருக்கிறார்.
தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக படக்குழுவினர் 50 பேருக்கு, ஒவ்வொரு நபருக்கும் 1 சவரனில் செயின் ஒன்றை வாங்கி பரிசளித்து இருக்கிறார்.
ஆகஸ்ட் 28ம் தேதி ரசிகர்கள் முன்னிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற இருக்கிறது. இவ்விழா குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் " இப்போது எல்லாம் பாடல்கள் கடைக்கு வரும் முன்பே, இணையத்தில் பாடல்களை வெளியிட்டு விடுகிறார்கள். கண்டிப்பாக எனது ரசிகர்கள் அனைவரும் ஒரிஜினல் சி.டி.க்களை மட்டுமே வாங்க வேண்டும் " என்று கூறியுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment