page
Saturday, 13 August 2011
வேலாயுதம் பாடல் வெளியீடு ரசிகர்களுக்கு விஜய் அழைப்பு
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் ஜோடியாக ஜெனிலியா, ஹன்சிகா நடித்துள்ளனர். ராஜா இயக்கி உள்ளார். ஆஸ்கார் பிலிம்ஸ் வி. ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ரூ.45 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இது தயாராகி உள்ளது.
இப்படத்தின் பூஜை சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது. இதுபோல் பாடல் வெளியீட்டு விழாவையும் ரசிகர்கள் முன்னிலையில் நடத்துகின்றனர். இவ்விழா வருகிற 28-ந் தேதி மதுரையில் நடக்கிறது. விழாவில் பங்கேற்க வரும்படி ரசிகர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
விழா ஏற்பாடுகளை ஆஸ்கார் ரவிச்சந்திரன் செய்து வருகிறார். பாடல் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.2 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாம். சண்டை காட்சிகளையும் பல கோடி செலவில் எடுத்துள்ளனர். கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் 25 நாட்கள் 4 மாவட்டங்களில் எடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment