வேலாயுதம்', 'நண்பன்' ஆகிய படங்களை அடுத்து விஜய் நடிக்கு போகும் படம் என்ன என்பது குறித்து இப்போது பரவிக் கிடக்கும் தகவல்கள் :
" வேலாயுதம் படத்தை அடுத்து ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் ஹரி அப்படத்தினை இயக்கலாம்.
அதன் பின்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பார். ஆனால், 'ஏழாம் அறிவு' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து படம் முடிய கண்டிப்பாக அக்டோபர் மாதம் ஆகும். ஆகவே அக்டோபருக்கு பின்னர் தான் அதற்கான வேலைகள் துவங்கும்.
சீமான் இயக்கத்தில் நடிக்கும் படம் தொடங்க கண்டிப்பாக தாமதம் ஆகலாம்.
அடுத்த வருடம் கெளதம் மேனன் படம் தொடங்கி 2013 பொங்கல் வெளீயிடாக வெளிவரும்.
இப்போதைக்கு ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, கெளதம் மேனன் என வரிசையாக படங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டது. ஆனால் விஜய்யின் அடுத்த கால்ஷீட் ஆர்.பி.செளத்ரி தயாரிப்புக்கு தான் " என்று கூறினார்கள்.
'வேலாயுதம்' படத்தில் இன்னும் ஒரு பாடல் மட்டும் தான் பாக்கியுள்ளதாம். 'வேலாயுதம்' படத்தின் இதர பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 15ம் தேதி இசை வெளீயிடு நடைபெற இருக்கிறது.
No comments:
Post a Comment