page
Tuesday, 30 August 2011
மிக சிறப்பாக வந்திருக்கிறது நண்பன்..! ஷங்கர்
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த நடிக்க 'நண்பன்' படத்தினை இயக்கி வருகிறார் ஷங்கர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்து வருகிறது.
இப்படம் குறித்து ஷங்கர் தனது இணையத்தில் " படத்தின் 98.8888 % பணிகள் முடிந்து விட்டன. இன்னும் 1.1112 % படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. ஒரு பாடலும், மற்றொரு பாடலின் சில பகுதிகளும் எடுக்க வேண்டும். செப்டம்பர் முதல் வாரத்தில் அதற்கான பணிகள் துவங்க இருக்கிறது.
எடுத்தவரை பார்த்ததில் 'நண்பன்' திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தில் நடித்த அனைவருமே மிக சிறப்பாக நடித்துள்ளார்கள். இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் டப்பிங் செய்யப்பட்டு விட்டன.
'நண்பன்' படப்பிடிப்பு முடிந்ததை கொண்டாடும் வகையில் விஜய் அனைவருக்கும் விருந்து அளித்தார். படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள ஜாலியாக காமெடி, டான்ஸ் என விருந்து நல்லபடியாக அமைந்தது.
இப்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த வேண்டும் என்பதால் ஹாரிஸ் ஜெயராஜை துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment