நண்பன் தெலுங்கில் 3 ராஸ்கல்ஸ் என்ற பெயரில் வெளியாகிறது. விஜய் படம் தெலுங்கில் வெளியாவதும், வெற்றி பெறுவதும் புதிதல்ல. ஆனாலும் நண்பன் கொஞ்சம் ஸ்பெஷல்.
நண்பன் தெலுங்குப் பதிப்பில் மகேஷ்பாபு நடிப்பதாகதான் இருந்தது. கடைசி நிமிடத்தில் விஜய்யே தெலுங்கிலும் நடிப்பதாக முடிவானது. ஆக, மகேஷ்பாபு நடிக்கயிருந்த படத்தில் விஜய் நடிக்கிறார் என்பது முதல் விஷயம். இரண்டாவது, விஜய்யின் படங்கள் தெலுங்கு டப்பிங் என்ற அடையாளத்துடனே இதுவரை ஆந்திராவில் வெளியாகியிருக்கின்றன. முதல் முறையாக நேரடிப் படம் என்ற அந்தஸ்துடன் திரைக்கு வருவது 3 ராஸ்கல்ஸ் படமே.
ஆந்திராவின் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர் என முன்னணி இளம் நடிகர்களின் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகின்றன. ஆனால் இவர்களின் படங்கள் இதுவரை தமிழில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தியதில்லை. அதேநேரம் 3 ராஸ்கல்ஸ் தெலுங்கில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
எல்லா வகையிலும் நண்பன் விஜய்யின் முதல் பரிட்சை என்றே சொல்லலாம்
No comments:
Post a Comment