நண்பன், வேலாயுதம் படங்களுக்குப்பிறகு சீமான் அல்லது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படங்களில்தான் விஜய் நடிக்கிறார் என்பது இத்தனை நாளும் வெளியான செய்திகள். விஜய்தரப்பில்கூட அதற்கு ஆம் என்ற பதிலே வந்து கொண்டிருந்தது. ஆனால் திடுதிப்பென்று நேற்று அவர் அடுத்து கெளதம்மேனன் இயக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் நடிப்பதாக திடீர் பப்ளிசிட்டி வெளியானது.
தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே? இது எந்த மாதிரியான படமாக இருக்கும்? என்று விஜய்தரப்பை அணுகியபோது,
இதுவரை விஜய் நடித்த படங்களில் பிரமாண்ட பட்ஜெட் படமாக இருக்கும். அதோடு மொத்த படத்தையும் அமெரிக்கா, நியூசிலாந்து என்று வெளிநாடுகளில்தான் படமாக்குகிறார்கள். அதுவும் இதுவரை எந்த கேமரா கண்களும் பார்க்காத லொகேஷனில் யோஹன் படமாகிறான். அதோடு ஹாலிவுட் கலைஞர்கள் பலர் பங்குபெறவிருக்கும் இப்படம் தமிழில் உருவாகும ஹாலிவுட் படம் என்கிற வகையில் அதிரடியாக இருக்கும். இதுவரை விஜய் படங்களில் இடம்பெற்ற ஆக்ஷனை விட இந்த படத்தில் பிரமாண்டமான சண்டை காட்சிகள் இடம்பெறுகிறது. அவரது ஆக்ஷன் பட வரிசையில் யோஹன் அத்தியாயம் ஒன்று முதல் இடம் பிடிக்கும் என்கிறார்கள்.
No comments:
Post a Comment