page
Monday, 22 August 2011
புதுச்சேரியில் நண்பன் பட ஷூட்டிங்..!
இந்தியில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் பதிப்பான நண்பன் படம் பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியான மற்றும் சத்தியராஜ் நடிப்பில் உருவாகிவருகின்றது. இப்படத்தின் சில காட்சிகளை (ஸ்ரீகாந்த்-விஜய் சம்பந்தப்பட்ட) பாண்டிச்சேரியில் உள்ள புதுவை பல்கலைகழக வளாகத்தில் நேற்று மாலை படபிடிப்பு நடைபெற்றது. இப்படபிடிப்பிற்கு ஸ்ரீகாந்த் மற்றும் விஜய் தனது வழக்கமான BMW கார்களில் வந்து இறங்கினார்கள்
இதனால் அங்கிருந்த கல்லூரி மாணவ மாணவியர் அவர்களுடைய செல்போன் கேமரா மூலம் சுட்டுத் தள்ளினார்கள். இதை அறிந்த மக்கள் கூட்டம் பல்கலைகழக வளாகத்தை நோக்கி படையெடுத்தனர். எனினும் பாதுகாப்பாக புதுவை போலீஸ் போடப்பட்டிருந்தனர்
இப்படத்தின் படபிடிப்பின் நிறைவை குறிப்பிடும் வகையில் கடந்த வாரம் சென்னை நட்சத்திர ஹோட்டலில் படபிடிப்பு குழுவினர்க்கு விஜய் விருந்தாளித்தது குறிப்பிடதக்கது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment