.label-size a:hover { text-decoration: none; }

Pages

page

Tuesday, 16 August 2011




இளைதளபதி விஜய் நடிக்கும் 52-வது படம் வேலாயுதம். இந்தப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க, இதுவரை ஒரு தோல்வி கூட கொடுக்காத எம்.ராஜா இயக்கி வருகிறார். தற்போது சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானநிலையம் எதிரில் உள்ள பின்னி மில்லில், வேலாயுதம் படத்தில் நான்காவது பாடல் காட்சி படமாகி வருகிறது. இன்னும் ஒரு பாடல் மட்டுமே எஞ்சியுள்ளது. விஜயின் தங்கையாக சரண்யா மோகன் நடித்திருகிறார். இவர்களோடு சந்தானம், பரோட்டா சூரி, எம்.எஸ் பாஸ்கர் உட்பட பல முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
நாகார்ஜுன் நடிப்பில் திருப்பதிசாமி இயக்கத்தில் உருவான ‘ஆசாத்’ தெலுங்குப் படத்தின் அடிப்படை கதையமைப்பை விஜய்க்கு ஏற்ப மாற்றி வேலாயுதத்தை எடுத்திருபதாகச் சொல்கிறார் இயக்குனர் எம்.ராஜா.
சாமனிய மக்களில் ஒருவனாக இருக்கும் ஓர் இளைஞன், மனித நேயப் பண்பால் மக்களுக்களால் தலைவன் என்று கொண்டாடப்படும் நிலைக்கு உயருவது தான் படத்தின் கதை. சுருக்கமாக சொன்னால் அகரம் ஒன்று சிகரமாய் மாறும் கதையாம்!
விக்ரமுக்கு கந்தசாமியில் அமைந்தது போல விஜய்க்கு வேலாயுதம் படத்தில் அமைந்திருபதும் ஒரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரம். இதில் விஜய் அழிக்கும் வில்லன்களின் எண்ணிக்கை 15. இதில் இரண்டுபேர் பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பும் வில்லன்கள்.
விஜயின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு முக்கிய தீனி இருந்தாலும் இன்னொருபக்கம், தங்கை செண்டிமெண்ட், முக்கோண காதல் ஆகிய இரண்டு முக்கிய அம்சங்கள் திரைக்கதையில் ரசிகர்களை கவருமாம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாசமலர் படத்திற்கு பிறகு இப்படியொரு அண்ணன், தங்கை பாசத்தை எந்தபடத்திலும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிறது படக்குழு. ஒவ்வோரு காட்சியும் நச் நச்சென்று இருக்குமாம். இதற்கு ஒத்துழைப்பது போல கிராமத்திலும், நகரத்திலுமாக மாறி, மாறி பயணக்கிறதாம் வேலாயுதம் படத்தின் கதை.
படத்தில் கிராமத்து பால்காரன் வேலுவாக வரும் விஜய் விற்பது பால். ஆனால் அன்பால், நட்பால், பிறரையெல்லாம் தன்பால் ஈர்க்கிறான். அவர் காற்றுமாதிரி இருப்பவன் அந்த ஊருக்கு. காற்றில்லாமல் உயிர் வாழ முடியாது அதுபோலத்தான் ‌வேலு அந்த ஊருக்கு! காதலனாக, பாசமுள்ள அண்ணனாக, ஆவேச இளைஞனாக விஜய்க்கு மல்டி ஃபேஸ் காதாபாத்திரம்!
படத்தில் இரண்டு நாயகிகள் ஒருவர் பத்திரிகையாளராக வரும் ஜெனிலியா, மற்றொருவர் ஹன்சிகா மோத்வானி. ஹன்சிகா விஜயின் முறைப்பெண்ணாக வருகிறார். இந்த இரண்டுபேரும் விஜயுடன் ரவுண்ட் கட்டி ரொமான்ஸ் செய்திருகிறார்கள்.
காமெடிக்கு சந்தானம், பரோட்டா சூரி, எம்.எஸ்.பாஸ்கர் என்று மூன்று முதலைகள். இவர்களோடு ‌காமெடியில் தன் பங்கிற்கும் அசத்தி இருக்கிறாராம் விஜய்!

ஈரோட்டு மாவட்டத்தில் உள்ள சிறு கிராமத்தில் ( கவுண்டமணியின் சொந்த ஊர்) ஒன்றரை கோடி ரூபாயில் ஒரு திருமண காட்சியை படம்பிடித்திருகிறார்கள். இந்த திருமணத்திற்காக ஊரே பந்தல்போட்டு, கோலம் போட்டு, சீரியல் லைட்கட்டி, தோரணம் அமைத்து ஊர்திருவிழா போல் அலங்காரம் செய்து ஆராவரம் செய்திருப்பது பிரமாண்டமான முயற்சியாம். ஊர் கூடி தேர் இழுப்பது போல, ஒரு ஊரே முன்னின்று நடத்தி வைத்துள்ள அந்த திருமணக்காட்சி, இதுவரை தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு படத்திலும் அமைந்ததில்லை என்கிறார்கள்.
அதே ஊரில் ஒரு கிணறு வெட்டி, அதை அன்பளிப்பாக அந்த ஊருக்கே அளித்திருக்கின்றனர். நடிகர்திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்த பாசமலர் படத்தினை புதுபிரிண்ட் போட் அந்த ஊரில் உள்ள டூரிங் டாக்கீஸில் போட்டு காட்டி மக்கள் பார்ப்பது போன்ற காட்சி படமான போது அனைவரும் படத்தில் மூழ்கிக் கிடக்க டைரக்டர் கட் சொல்ல மறந்து விட்டாராம்.
மொத்தமுள்ள ஐந்து பாடல்களில் நான்கு பாடல்களை ஒவ்வோரு பாடலையும் தலா இரண்டு கோடி வீதம் மொத்தம் எட்டு கோடி செலவில் படமக்கியிருக்கிறார்களாம். இதில் விஜய்க்கான அறிமுகப் பாடலை திருமூர்த்திமலையில் படமாகியுள்ளனர். ஏற்கனவே சிவகாசி, போக்கிரி படங்களில் விஜய்க்கு அறிமுகப் பாடல்களுக்கு நடனம் அமைத்த அசோக்ராஜ், இப்பாட்டுக்கும் நடனம் அமைத்து இருக்கிறார்.
இந்த அறிமுகப் பாடலில் கிராமத்து தப்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற ஏராளமான ஆட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் இருநூறு கிராமத்து நடன கலைஞர்களும் நூற்றிஐம்பது வெளிநாட்டு நடனக்கலைஞர்களும் ஆடி இந்தப்பாடலை பிரம்மாண்டமாக்கி இருகிறார்களாம்.
விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் “என் உச்சி மண்டையில சுர்ருங்குது…!” பாடல் மூலம் பிரபலமானார் பத்திரிகையாளர், கவிஞர் அண்ணாமலை வேலாயுததில் மொத்தம் மூன்று பாடல்களை எழுதியுள்ளார்.
வரும் 28-ஆம் தேதி மதுரையில் வெளியாக உள்ள இப்படத்தின் இசைவெளியீட்டில் “ ரத்தத்தின் ரத்தமே” பாடலுக்கு சென்னையில் இருந்து அழைத்துச் செல்லபடும் நடனக்கலைஞர்கள் நடனமாட இருகிறார்கள். படத்தில் இதுவே விஜயின் அறிமுகப்பாடல்!
நாகப்பட்டினத்தில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த பொதுகூட்டத்தில் விஜய் பேசும்போது “ நான் நடித்த 51 படங்களில் எனக்கு இப்படி ஒரு பாடல் அமையவில்லை” என்று இந்த பாடலை சொல்லி ரசிகர்களுக்காக மேடையில் அந்த பாடலை பாடிக்காட்டினார்.
படத்தில் இந்த பாடல் விஜய் தன் தங்கை மீது வைத்திருக்கும் பாசத்தை சொல்கிற பாடலாக வருகிறதாம். ஆனால்,அதையும் தாண்டி எல்லா விஜய் ரசிகர்களுக்கான பாடலாக அமைந்து விட்டது. இது இனி விஜயின் மக்கள் இயக்க பாடலாக இருக்கும் என்கிறார்கள்.
“ ரத்தத்தின் ரத்தமே…! என் இனிய உடன்பிறப்பே…! அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே…! என் வாழ்க்கை உனக்காகத்தானே, செத்தாலும் பிழைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவா…!” என்ற வரிகள் விஜய் ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்து வரும் என்று நம்புகிறார் படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டணி.

வேலாயுதம் படப்பிடிப்பில் இன்று வரை ஒருநாள்கூட லேட்டாக வந்ததில்லையாம். அவரால் ஐந்து நிமிடம் கூட சூட்டிங் தாமதமானதில்லையாம். படத்தில் ஒவ்வொரு காட்சியையும், உணர்வுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்து கொடுத்திருப்பதாக கூறும் இயக்குநர் ராஜா, விஜய்க்கு இந்தபடம் உச்சகட்ட ‌காமெடி படமாகவும் அமையும் என்று கூறியிருகிறார்.
படத்தின் ஒளிப்பதிவாளர் ப்ரியன் கிரீன் மேட் தொழில்நுட்பத்தில் ஆக்‌ஷன் பிளாக் காட்சிகளை படம் பிடித்து இருகிறாராம். காதல் மற்றும் கிராமத்துக் காட்சிகளை மிக அழகாக படமாக்கி இருக்கிறாராம். இவர் ஏற்கனவே சாமி, திமிரு, போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இயக்குனர் ஹரியின் ஃபேவரைட் ஒளிபதிவாளராக இருந்தவர்.
இந்தபடத்தின் இசை வெளியீட்டை மதுரையில் நடத்த என்ன காரணம் என்று துருவினால், விஜய் மக்கள் தொடர்பாளரிடமிருந்து நமக்கு கிடைத்தது ஒரு பிரத்தியேகத் தகவல்! “ பெரும் தடைகளைத் தாண்டி, அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதியில் இருந்து மூன்று நாட்கள் கழித்து வெளியான காவலன் படத்தை மதுரை ரசிகர்கள் மற்ற மாவட்ட ரசிகர்களை விட அதிகமாக ஆதரித்தார்கள். மதுரையில் மட்டும் காவலன் 3 மூன்று கோடி வாசூலித்துக் கொடுத்தது. அதை மறக்காத விஜய். மதுரை ரசிகர்களை கௌரவிக்க நினைத்தே இசையை அங்கே வெளியிடுகிறார்” என்கிறார்.
வேலாயுதம் படத்தில் ஒரு பாடல் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கும் சூழ்நிலையில் , படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள், முக்கியமாக கிராஃபிக்ஸ் வேலைகள் நிறைய இருப்பதால் படத்தை தீபாவளிக்கு வெளியிட இருகிறார்கள். மதுரை இசைவெளியீட்டுக்கு அனைத்து மாவட்டத்திலும் இருந்து விஜய் ரசிகர்கள் குவிய இருகிறார்களாம்.

No comments:

Post a Comment