.label-size a:hover { text-decoration: none; }

Pages

page

Wednesday, 3 August 2011

தமிழிற்கேற்றமாதிரி மாறிவரும் நண்பன்


இந்தியில் வெற்றி பெற்ற ”த்ரீ இடியட்ஸ்” படத்தை தமிழில் ”நண்பனாக” ரீமேக் செய்து வரும் இயக்குனர் ஷங்கர், படத்திற்கு தமிழ் சினிமா டச் கொடுக்க, பொருத்தமான இடங்களை தேர்வு செய்து படப்பிடிப்பை நடத்தியிருப்பதாக கூறுகிறார்கள்.
”நண்பன்” படத்துக்காக டேராடூனில் படபடவென படப்பிடிப்பை நடத்திய இயக்குனர் ஷங்கர், சென்னையின் பரபரப்பான கோயம்பேடு பகுதியில் காட்சிகளை படமாக்கியுள்ளார்.

கல்லூரியின் தண்ணீர் தொட்டியின் மீது நண்பர்கள் மூன்று பேரும் உட்கார்ந்து ஜாலியாக அரட்டையடிக்கும் காட்சியை கோயம்பேட்டில் ஷங்கர் படமாக்கியிருப்பதாக சொல்கிறார்கள்.
குறிப்பிட்ட இந்த காட்சியில் இளைய தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூன்று நாயகர்களும் நடித்தார்களாம். இந்த இடத்திலிருந்து கமெராவில் மொத்த சென்னையை பதிவு செய்துள்ளார்களாம்.

No comments:

Post a Comment