சூர்யா மூன்று வேடங்களில் நடித்து வரும் ‘7ம் அறிவு' படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ், இப்படம் முடிந்ததும் இளைய தளபதி விஜயை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார் என்று முன்பே செய்தி கொடுத்திருந்தோம். தற்போது அப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் யார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தில், விஜயின் ஜோடியாக நடிக்க வைக்கு தமிழ் நடிகைகளை விடுத்து, பாலிவுட் நடிகைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அநேகமாய் பிரபல பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்.
அப்படி ஒருவேளை பிரியங்கா சோப்ராவின் கால்ஷீட் கிடைக்கவில்லையெனில் மற்றொரு பாலிவுட் நடிகையான சோனம் கபூரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். வேலாயுதம், நண்பன் ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய், இப்படங்களை முடித்து விட்டு ஏ.ஆர்.முருகதாஸின் படத்தில் நடிக்க இருக்கிறார்
No comments:
Post a Comment